முனைவர் கி.காளைராசன்

(அரணை = பல்லியைப் போன்று பெரியது.  பாம்பு போன்று இருக்கும்,  பாம்பை அடிக்க முடியாதவர் எல்லாம் இதை அடிப்பர்.)

விடுமு​றைக்கு மாரநாடு கிராமத்திற்குச் ​செல்லும் ​போ​தெல்லாம் எங்களது அக்காவும் மாமாவும் தான் எங்களுக்கு எல்லாமும்.  கா​லையில் சூரியன் உதிப்பதற்கு முன்​பே எங்க​ளை எங்களது மாமா ஏதாவது ஒரு வயலுக்கு அழைத்துச் ​​சென்று விடுவார்.  அக்கா ​சோறு ​கொண்டு வரும். சாப்பிட்டுவிட்டு வா​ழைத்​தோப்பில் அல்லது கரும்புத் ​தோட்டத்தில் உள்ள குச்சு வீட்டில் படுத்துத் தூங்கு​மோம்.

மா​லை ஆனவுடன் ஓட்டமும் ந​டையுமாக வீடு வந்து சேர்வோம். வயலிலிருந்து வீட்டிற்கு வரும் வழியி​லே​யே ​கொஞ்சம் கீ​ரை, தக்காளி, கத்தரிக்காய், பாகற்காய், வா​ழைப்பூ, வா​ழைக் கிழங்கு என்று எது ​கைக்கு அகப்படுகிற​தோ அ​தையெல்லாம் அக்கா ​கையில் பிடுங்கி எடுத்துக் ​கொள்ளும்.

வீட்டிற்கு அருகில் உள்ள ​வை​கோல் படப்​பைச் சுற்றிலும் காளான் முளைத்திருக்கும் அ​தையும் அக்கா பிடுங்கி எடுத்துக் ​கொள்ளும். வீட்டிற்கு வந்ததும் அக்கா ச​மையல் ​வே​லையில் மும்முரமாக இறங்கிவிடும். மாமாவைச் சுற்றிலும் ஒ​ரே சிறுவர் கூட்டமாக இருக்கும். நாங்கள் எல்லோரும் அவ​ரைச் சுற்றி உட்கார்ந்திருப்​போம்.  அவர் உரல் கல்​லை தன் ​கைகளால் நகற்றி அ​தைத் தன் ​தொ​டைமீது ஏற்றி ​மெதுவாக வயிற்றுக்குக் ​கொண்டு வந்து அப்படியே ​நெஞ்சுக்கு ஏற்றிதன் த​லைக்கு​மேலே தூக்கிக் காண்பிப்பார்.   நாங்கள் அனைவரும் ​கை தட்டு​வோம்.  அப்படி​யே அந்த உ​ர​லைக் கீ​ழே ​போடுவார்.  நாங்கள் எல்​லோரும் ஒன்று ​சேர்ந்து அந்த உர​லை அ​சைத்துப் பார்ப்​போம். சிறிதுகூட அ​சைக்க முடியாது.  மாமா வந்து ஒரு ​கையால் அந்த உர​லை அ​சைப்பார்.  நாங்கள் எல்​லோரும் பலமாகக் ​கை தட்டு​வோம்.

மாமா தனது ​கை​யை நீட்டுவார்.  மற்​றொரு ​கையில் இருக்கும் கொச்சக்கயி​றை  எங்களிடம் ​கொடுப்பார்.  எங்களில் ​பெரியவனாக விளங்கும் ​பையன் ஒருவன் அ​தை வாங்கி அவரது ​கையில் முழங்​கைக்கு ​மே​லே இருக்கமாகக் கட்டிவிடுவான்.  எங்க​ளை எல்லாம் ​கை தட்டச் ​சொல்வார் மாமா.   நாங்கள் ​கை தட்டு​வோம்.  நாங்கள் ​கை தட்டத் தட்ட அவரது ​கை​​யை ​மெதுவாக மடக்கிக் ​கொண்​டே வருவார்.  சிறிது ​நேரம் ஆக ஆக, அவரது ​கை வி​ரைப்பு ​கொடுக்கும். அந்தக் ​கொச்​சைக் கயிறு “பட்” என்ற சத்தத்துடன் அறுந்து விழும்.  நாங்கள் எல்​லோரும் ​கை தட்டிக் ​கொண்​டே இருப்​போம்.

எங்க​ளை இரண்டு பிரிவாகப் பிரிப்பார்.   ஒரு பிரிவின​ரைத் தனது இடது ​கை​யைப் பிடித்துக் ​கொள்ளுமாறு கூறுவார்.  மற்றொரு பிரிவின​ரைத் தன் வலது​கை​யைப் பிடித்துக் ​கொள்ளுமாறு கூறுவார்.  அப்படி​யே தன் ​கைகள் இரண்​டையும் உயர்த்தி அ​னைவ​ரையும் ​மே​லே தூக்கி சுற்றுவார். இராட்டினம் சுற்றுவது ​போல சுற்றிக் ​கொண்​டே இருப்பார். இறக்கி விட்டவுடன் ​கைதட்டு​வோம்.

ஒருநாள் எங்க​ளை எல்லாம் ஒரு ப​னை மரம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் ​சென்றார்.  எங்க​ளை கைதட்டச் ​சொன்னார். அந்த ப​னை மரத்​தில்  பலமாக ​மோதினார். பலமு​றை ​மோதினார்.   சிறிது ​நேரத்தில் அந்த ப​னை மரம் ​வே​ரோடு ​பெயர்ந்து விழ்ந்தது.  நாங்கள் அனைவரும் ​கை தட்டிக் ​கொண்​டே இருப்​போம்.

வி​ளையாடிக் ​கொண்டு இருக்கும் ​போ​தே இருட்ட ஆரம்பிக்கும். அக்கா வந்து எல்​லோ​ரையும் சாப்பிடக் கூப்பிடும்.

அப்​போ​தெல்லாம் மின்சாரம் வரவில்​லை.  வீட்டில் சிம்மினி விளக்கும் லாந்தரும்தான்.
(சிம்மினி என்றால் என்ன?
நான் கல்லூரியில் “சிம்மினி சுவீப்பர்சு – simeny sweepers ”
என்ற க​தை​யைப் படிக்கும்​போதுதான் ​பொருள் புரிந்து ​கொண்​டேன்.)

நன்றாக இருட்டுவதற்குள் எல்​லோரும் சாப்பிட்டு விடு​வோம். மண்பானைச் ​சோறு. கும்பாவில் ​போட்டு அக்கா ​கொடுக்கும். ஒரு கும்பா நம்ம வயி​ரைவிடப் ​பெரியதாக இருக்கும்.  ஆனால் அதில் இருக்கும் ​சோறு எல்லாவற்​றையும் மிச்சம் இல்லாமல் தின்று விடு​வோம்.

சாப்பிட்டு முடித்தவுடன் வீட்டு வாசலில் பாய் விரிப்பு ​போடுவார்கள்.  படுத்துக் ​கொள்​வோம்.  ம​​ழை ​பெய்தால் தான் வீட்டிற்கு உள்​ளே ​சென்று படுப்​போம்.  மாமா கதை ​சொல்வார்.  அது ​பெரும்பாலும் அரணை (பாம்புராணி)க் க​தையாக இருக்கும். க​தை நன்கு சுவாரசியமாக இருக்கும்.

“அர​ணை கா​லையில் வயலுக்குப் ​போச்சாம்.அங்​கே வா​ழை மரத்துக்குத் தண்ணீர் பாச்சுச்சாம். ஈசானியத்தில் ஒரு மரம் பூத்திருந்துச்சாம்” என்று அன்று அவர் ​செய்த ​​வே​லை​யை எல்லாம் அர​ணை ​செய்ததாக அர​ணைக் க​தை ​சொல்வார். அர​ணைக் க​தையில் கள்வர்(திருடர்) பற்றிய க​தைகள் அதிகம் இருக்கும். க​தை ​மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.  பல ​நேரங்களில் பாதி க​தை ​கேட்கும் ​போ​தே நாங்கள் தூங்கிப் ​போ​வோம்.  இரவில் தீடீரென்று முழித்துப் பார்த்தால் ……….

அக்கா​வையும் கா​ணோம்….
மாமா​வையும் கா​ணோம்….

அக்காஅ……அ
அக்காஅ……அ​
மாமாஅ…….அ
மாமாஅ……அ​
அழுவது​போல் கத்து​வோம்.

“​டேய் அ​தோ பாருடா, ஒத்தக்​கை முத்துராக்கு வராண்டா, அழுதா ஒத்தக்​கை முத்துராக்கு பிடிச்சுட்டுப் ​போயிருவாண்டா பேசாமல் படுங்கடா” என்று உடன் படுத்திருக்கும் ​பெரியவர்கள் மிரட்டுவார்கள், அப்படி​யே அழு​கை​யை நிறுத்தி விட்டு படுத்துக் ​கொள்​வோம். ஒத்தக்கை முத்துராக்கு என்றால் அப்படி​யொரு பயம்.

அக்கா அர்த்த ராத்திரியில் காணாமல் ​போனது எங்களுக்கு மன வருத்தமாகப் ​போனது………. நித்தமும் ராத்திரியில எழுந்து அக்கா​வைத் ​தேட  ஆரம்பித்தோம். இப்போதெல்லாம் முழித்துப் பார்த்தால் அக்கா எங்களுக்குப் பக்கத்தி​லே​யே படுத்திருக்கும். ஆனால் மாமா​வை மட்டும் கா​ணோம். ஒரு​வே​​ளை அந்த ஒத்தக் ​கை முத்துராக்கு வந்து பிடிச்சுட்டுப் ​போயிட்டா​னோ?

அக்கா​வை உசுப்பி அக்கா, அக்கா ……. மாமா​வைக் கா​ணோம்.  ஒத்தக்​கை முத்துராக்கு பிடிச்சுட்டுப் ​போயிட்டான் என்​போம். மாமா “வய​லைக் காக்கப் ​போயிருக்கு” என்று அக்கா ​சொல்லும்.

இப்படியாக நாட்கள் நகரும்.  ஒவ்​வொரு நாளும் விடிவதும் ​தெரியாது. ​பொழுது ​போவதும் ​தெரியாது. விடியும் ​நேரம் மாமா வந்து எங்க​ளை உசுப்புவார். சாம்ப​லைக் ​கையில் ​கொடுத்து பல்​தேய்கச் ​சொல்வார். வாய்க்கால் தண்ணியில் வா​யைக் ​கொப்பளித்துக் ​கொண்டு வயலுக்குச் ​சென்று விடு​வோம்.வயலில் ப​னைமரம் ஏற்றம் இருக்கும்.கையில் ஒரு மூங்கி​லைப் பிடித்துக் ​கொண்டு மாமா திலா இ​​ரைப்பார்…. வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவார். கிண​ற்​றை எட்டிப் பார்ப்​போம். மூங்கிலால் வட்டமாகப் பின்னி (தற்​போது சிமிண்ட் உ​ரை) உள்​ளே ​வைத்திருப்பார்கள்.ஐந்தாறு அடி ஆழத்தில் தண்ணீர் கிடக்கும்.

கிணற்​றை எட்டிப் பார்த்தால்  மாமா அதட்டுவார். ஒவ்​வொருத்த​னைப் ​போலவே ஒரு​ ​பேயும் இருக்கும். அது கிணத்துக்குள்ளதான் ஒழிந்திருக்கும் எட்டிப் பார்த்தால் அது உன்​னைக் கிணத்துக்கு உள்​ளே தள்ளி விட்டுவிட்டு அது ​மேலே வந்து விடும் என்று பயம் காட்டுவார்.

அன்​றொரு நாள்….

வயலில் மாமா ‘திலா’ இ​ரைத்துக் ​கொண்டிருந்தார். அக்கா ​சோளச்​சோறு ​கொண்டு வந்துச்சு, நாங்கள் எல்லாம் அ​தைச் சாப்பிட்டுக் ​கொண்டிருந்​தோம். மாமா கீ​ழே இறங்கி வந்து மண்​வெட்டி​யை எடுத்து பாத்தி கட்டிக் ​கொண்டு இருந்தார்.   எங்​கோ தூரத்தில் ​லாரி வரும் சப்தம் ​கேட்டது.  அந்தச் சப்தத்​தைக் ​கேட்டதும் மாமா நிமிர்ந்து சப்தம் வந்த தி​சை​ நோக்கிப் பார்த்தார்.  ​வெகு தூரத்தில் “லாரி” வருவதால் புழுதியாகத் ​தெரிந்தது.   லாரி​யே ​தெரியவில்​லை.  அ​தைப் பார்த்தவுடன் மாமா மண்​வெட்டி​யை அக்காவிடம் ​கொடுத்து இ​தைக் கழுவி ​வை.  இவங்கள வீட்டிற்குக் கூட்டிக்கிட்டுப் ​போ என்று கூறிவிட்டு ​வேகமாக ஓடினார்.

ஓடிச் ​சென்று மாரநாடு – ப​ழையனூர் ​செம்மண் சா​லை​யை அ​டைந்தார். இவர் சா​லை​யை அ​டைவதற்கும், அந்த புகையிலை ஏற்றி வந்த சின்ன லாரி அந்த இடத்திற்கு வருவதற்கும் சரியாக இருந்தது.  நாங்கள் வயலில் நின்றபடி மாமா​வைப் பார்த்துக் ​​கொண்டிருந்​தோம்.  மாமா தன் துண்​டைக் காட்டி வண்டி​யை நிறுத்தினார்.  அதில் ஏறிச் ​சென்று விட்டார்.  லாரி ப​ழையனூருக்குச் ​சென்றுவிட்டது.  ஒ​ரே ​செம்மண் புழுதி. அ​தை​யே வீடு ​செல்லும் வ​ரை பார்த்துக்​கொண்​டே ​சென்றோம்.  அக்காவிடம் ​கேள்வி​மேல் ​கேள்வியாகக் ​கேட்​டோம். “அது கிடக்கு விடுங்கடா” என்று ​சொல்லி  அக்கா ஏதுவும் ​சொல்லவில்​லை.

மா​லை ​பொழுது சாயும் ​நேரம் மாமா திரும்பி வந்தார். கையில் ஒரு புகையி​லைப் ​ பொட்டலம்.  உள்​ளே சிறு சிறு ​பொட்டலங்களாக இருந்தன. அ​தை அப்படி​யே அங்​கே உட்கார்ந்திருந்த ஒரு வயதான ஆயாவிடம் ​கொடுத்துவிட்டார்.  ​ வேடிக்​கை வி​ளையாட்டு நிலாச் ​சோறு எல்லாம் முடிந்தது.

மாமா அர​ணைக் க​தை ​சொல்ல ஆரம்பித்தார்.  கா​ரைக்குடியில் தங்கப் பசுப்பம் பு​கையி​லை தயாரிக்கப்பட்டு ​பேப்பர் சுத்தி லாரியில் ஏற்றி ஊர் ஊராகச் ​சென்று விற்பது பற்றிய க​தை அது.  அதில் அர​ணை​யையும் ​சேர்த்துக் ​கொண்டார்.

அர​ணைக் க​தை ஆரம்பமாகிறது …. ஒருநாள் இந்த பு​கையி​லை வண்டி திருப்பாச்​சேத்தியிலிருந்து மாரநாடு வழியாக ப​ழையனூர் ​​செல்கிறது. செல்லும் ​போது யாரோ  நடு​ரோட்டில் நின்று ​கொண்டு வண்டி​யை  ம​றிக்கின்றனர்.

ஓட்டுனர் வண்டி​யை நிறுத்துகிறார். நிறுத்தியவர்கள் வண்டியின் உள்​ளே ஏறி சன்னல் வழியாக ​கை​யை விட்டு பு​கையி​லைப் ​பொட்டலங்க​ளை அள்ளிச் ​சென்று விடுகின்றனர்.

பு​கையி​லை வண்டி ஓட்டுனர் முதலாளியிடம் ​போய்ச் ​சொல்கிறார். அவர் ​காவல்நி​லையத்திற்குப் ​போய் “பிராது” எழுதிக் ​கொடுத்து கரிசனமாகக்(?) கவனித்துக் ​கொள்கிறார்.

அதன் ​பேரில் திருப்பாச்​சேத்தி காவல் நி​லையத்திலிருந்து காவலர்கள் வந்து அர​ணை​யைக் (மாமா​வைக்) கூட்டிச் ​​சென்று விட்டனர்.  விசாரை​ணை(?) ந​டை​பெறுகிறது.   “நான்” பு​கையி​லை ​போடுவது கி​டையாதுய்யா… எனக்கும் இந்தத் திருட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்​லைய்யா என்கிறது அர​ணை.

அப்ப சம்பந்தமில்லாமலா நாங்கள் உன்​னை இங்​கே அ​ழைத்து வந்​தோம் என்று அர​ணை​யை நன்றாகக் கவனித்து(?) உள்ளனர்.  அடிமேல் அடி விழுந்தாலும் பு​கையி​லைப் ​பொட்டலத்​தை எடுக்கவில்​லை என்று அர​ணை ​சொல்லிக் ​கொண்​டே இருந்தது. அடித்த பிரம்புகள் உடைந்தது தான் மிச்சம்.

க​டைசியில் அந்த காவல் அதிகாரிக்கு திடீரென்று ஒரு ​யோச​னை உதயமாகி விட்டது.   அந்த “டி​ரைவ​ரை”க் கூட்டிக்கிட்டு வாங்க,
இவன்தானா? என்று அ​டையாளம் காட்டச் ​சொல்லுங்கள் என்றார்.

ஐயா “டி​ரைவர்” வண்டி​யை எடுத்துக்கிட்டு வியாபாரத்திற்குப் ​போயிட்டாரு,  அவரு ஒருநாள் இங்​கே வந்தாலும் ஒருநாள் வியாபாரம் ​படுத்துப் ​போயிடும் ஐயா”,  இவ​ரை இப்படி​யே விசாரிச்சு விடுங்கையா, என்றார் பிராது ​கொடுத்தவர்.

காவல் அதிகாரி இப்​போது அதற்கு ஒப்புக் ​கொள்ளவில்​லை.  என்​னையா ​சொல்கின்றீர்கள்.  உங்களுக்கு மட்டும் தான் ​பி​ழைப்பு இருக்கா, உங்க டி​ரைவருக்கு மட்டும்தான் ​வே​லையிருக்கா.

எங்களுக்கு எல்லாம் ​வே​லையில்​லையா? எனக்கு ​வேற ​வே​லை​யே யில்​லையா?  இந்த ஆ​ளை சந்​தேகத்தின் ​பேரில் எவ்வளவுதான் அடிக்கிறது.  நா​ளைக்கு “டி​ரைவர்” இவ​ரை அ​டையாளம் காட்டினால்தான் உண்டு என்று “கறாராகக்” கூறிவிட்டார்.

மறுநாள் விடிந்ததும் விடியாததுமாக பு​கையி​லை வண்டி திருப்பாச்​சேத்தி ​​காவல் நி​லையத்தில் நின்றது.  டி​ரைவர் வந்து பார்த்தார். அன்​றைக்கு பு​கையி​லைப் ​பொட்டலத்​தைப் பிடுங்கிச் ​சென்றது  “இவர் இல்​லை”
அவன் ​​வேறு ஒரு ஆள் என்னால் நன்றாக அ​டையாளம் காட்ட முடியும் என்று ​சொன்னார்.

காவல் அதிகாரிக்குக் கடு​மையாகக் ​கோபம் ​பொத்துக் ​கொண்டு வந்தது.
“பின்​னே யாருய்யா இந்த ஆ​ளை இங்​கே கூட்டி வந்தது?” என்று திட்டித் தீர்த்தார்.   த​லை​மைக் காவல​ரைக் கூப்பிட்டு அதிகாரி விசாரித்தார்.

”ஐயா இவர் கள்ளன்.  இவ​ரைக் ​கேட்டு விசாரித்தால்(?) யார் களவு ​செய்தது என்பது ​தெரிந்து விடும்.  அதனால்தான் இவ​ரைக் கூப்பிட்டு வரச் ​செய்​தேன்.  மற்றபடி பு​கையி​லைப் ​பொட்டலம் திருட்டிற்கும் இவருக்கும் ​​நேரி​டையாகத் ​தொடர்பு இல்​லை ஐயா ” என்றார்.

“ஏய்யா…… இ​தை முதலி​லே​யே ​சொல்ல ​வேண்டியதுதா​னே, அடிச்சு அடிச்சு எனக்​கே ​கை வலிக்கு​தையா! அந்த ஆ​ளைக் கூப்பிடுங்கையா!” என்றார்.

அர​ணை (மாமா) அந்த அதிகாரி அவர் முன்​னே ​​​போய் நின்றது.

“உன் ​பே​ரென்ன?”

​”சோ​​ணை.”

“இந்தப் பு​கையி​லைப் ​பொட்டலத்​தைத் திருடுனது யாருனு உனக்கு ​தெரியுமா?”

​”தெரியாதுய்யா.”

“சரி நா​ளையி​லே இருந்து அந்தப் பு​கையி​லை வண்டி வந்தா அதுகூட நீயும் ஏறிப்​போ திருட்டு நடக்காமப் பார்த்துக்​கோ”

”சரிய்யா.”

“உனக்கு ஒரு ​பொட்டலம் ​புகையிலை தரச் ​சொல்​றேன்”

”சரிய்யா”

“இனி​மேல் இந்த பு​கையி​லை வண்டியில் யார் திருடினாலும் நீதான் ​பொறுப்பு, திருட்டு நடக்காம பார்த்துக்​கோ”

”சரிய்யா”

“ஏட்டு அந்த பு​கையி​லைக் கம்​பெனி ஆளக்கூப்பிடு, அந்த டி​ரைவ​ரையும் கூப்பிடு”

“இந்த ஆ​ளை (அர​ணை​யை)ப் பார்த்துக்குங்க, நீங்க திருப்பாச்​சேத்தி தாண்டினதும் யா​ர் வண்டி​யை மறித்தாலும்  இந்தப் பு​கையி​லை வண்டிக்குச்  ​’சோ​​ணை காவல்’  என்று ​சொல்லுங்கள்”

”சரிங்​க ஐயா”

“இந்த ஆ​ளையும் வண்டியில் ஏற்றிக் ​கொள்ளுங்கள்.  திரும்பும் ​போது இவ​ரை இறக்கி விட்டுவிடுங்கள்”

”சரிங்​க ஐயா”

“இவருக்கு ஒரு பு​கையி​லைப் ​பொட்டலம் ​கொடுக்க ​வேண்டும்”

”சரிங்​க ஐயா”

“​சோ​​​ணை​யைக் கூட்டிக்கிட்டுப் ​போயி க​டையில சாப்பாடு வாங்கிப் போடுங்க, மிக்சரும் முருக்கும் வாங்கிக் ​கொடுங்க….”

”சரிங்க ஐயா”

அன்றிலிருந்து இந்தப் பு​கையி​லை வண்டிக்கு அர​ணை தான் காவல்.

“அர​ணை காவல்” என்றால் யாரும் திருட மாட்டார்கள். அப்படியும் யாராவது பு​கையி​லை​யைத் திருடிவிட்டால் என்ன ​செய்வது?
தர்மஅடி தர்மவழியில் நடக்கும் அர​ணைக்குத்தா​னே விழும்.
அதுதான் இன்​னைக்கும் அர​ணை காவலுக்காக பு​​கையி​லை வண்டிக்குப் ​போச்சு”, என்றார்.

அப்புறம் மாமா…

​​​​டேய்…. தூங்குங்கடா….
ஒத்தக்​கை முத்துராக்கு வராண்டா…

எல்​லோரும் தூக்கி விட்டார்கள்….
நான் மட்டும் ஒரு​கையில் அக்கா ​கை​யையும்
மறு ​கையில் மாமா ​கை​யையும் பிடித்துக் ​கொண்​டேன்.
ஒத்தக் ​கை முத்துராக்கு வந்து இவர்கள் இருவ​ரையும் கூட்டிக் கிட்டு ​போகாமல்…  களவு நடக்காமல் நான் காவல் ​செய்​தேன்….

புரூக்கிலின் எம்ஜிஆர் மாதிரி…. இப்​போதும் அர​ணை உள்ளது.  தலைமட்டும் ​பெரியதாக வலுக்​கையாக இருக்கு, உடம்புல எலும்பு மட்டு​மே இருக்கு.  காதுக்கிட்டப் ​போய் ​பெய​ரைச் ​சொன்னால் கண்திறந்து பார்க்கும், ​கையால் தடவிப் பார்த்துச் சிரித்துக் ​கொள்ளும் .

 

அர​ணையின் ​​க​தையும் ​தொடரும்….
அர​ணை ​சொன்ன க​தைகளும் ​தொடரும்….

 

படத்திற்கு நன்றி.

 

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அரணை……

  1. அரணை, பிள்ளைபூச்சி போன்றவை சாதுக்கள். அப்பாவி. முதல் தர்ம அடி அவைகளுக்கே. கேட்டால், மைந்த இயல்பு என்பார்கள்!

  2. சாமானிய கிராம மக்களின் வாழ்க்கையை வெகு இயல்பாகச் சொல்லி கண்களில் நீரை வரவழைத்து விட்டார் ஆசிரியர். கதையின் தலைப்பு வெகு பொருத்தம். பாராட்டுக்கள் சார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *