மௌனத்தின் விடியல்
ராஜி வெங்கட்
கும்மிருட்டில் முள் நகர்த்தி
குரல் தரும் கடிகாரம்,
மேலே ஓடும் மின்விசிறியின்
மெல்லிய ஓசை,
எங்கோ எதற்கோ குரல்
எழுப்பி அழும் குழந்தை,
எந்த சத்தமானால் என்ன?
எதுதான் உன்னுடைய
மௌனத்தை மொழி பெயர்க்கும்?
நீண்ட இரவுக்குப் பின்
நீளும் சூரியக் கதிருக்காய்
நிதமும் காத்திருப்பது போல்,
நீயும் உன் வார்த்தைக்கதிர்
நீட்டி ஒளி தருவாய் என
நானும் காத்திருப்பேன்.
எப்போதும் காத்திருப்பதே ஒரு சாராரின் தாபமாகவும்
எப்போதும் காக்கவைப்பதே மற்றொரு சாராரின் சாபமாகவும்
உள்ளதை அழகாக எழுதியுள்ளார் இந்த கவிதாயினி.
கடைசியில் ‘மெள்னத்திற்கு விடிதல்’ வந்தால் சரிதான்.
It was really nice……
எந்த சத்தமானால் என்ன?
எதுதான் உன்னுடைய
மௌனத்தை மொழி பெயர்க்கும்?
such a nice thoughts….thanks Raji Venkat…
நன்று.
மௌனத்தின் மொழிபெயர்ப்புஅகராதிகளுக்குள் அடங்காது..ஆனாலும்,அன்புக்கதிரவன் எழும்போதுவார்த்தைக் கதிர்கள்வரும் கட்டாயம்…காத்திருந்து பின்கைகூடுதல் இனிமைதானே…!
-செண்பக ஜெகதீசன்…