‘வர்ணம்’ படத்தில் கணக்கு டீச்சர் கவிதாவாக மோனிகா – செய்திகள்
விரைவில் வெளியாகவுள்ள ’வர்ணம்’ படத்தில் ஒப்பனை இல்லாமல் நடித்திருக்கிறார் மோனிகா.படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி அவரிடம் கேட்டபோது:
வர்ணம் படத்தில் உங்களின் வேடம் பற்றி….
முதன் முறையாக வர்ணம் படத்தில் நான் டீச்சராக நடிச்சிருக்கேன். மேக்கப் இல்லாம இந்தப் படத்துல நான் நடிச்சிருக்கேன். டீச்சர்னா அதுக்குள்ள மெச்சூரிட்டி, மேனரிசம் எல்லாம் நடிப்புல கொண்டு வரணும். அதை நான் முயற்சி செய்தப்போ, எனக்கு ரொம்ப புதுசா இருந்துச்சு. டீச்சரா நான் கேமரா முன்னாடி நின்னப்போ… ரொம்ப திருப்தியா, ரொம்ப சந்தோசமா, ரொம்ப பெருமையா உணர்ந்தேன்!
கணக்கு டீச்சரை யாராவது “கணக்கு” பண்றாங்களா…?
மொத்த ஸ்கூலுமே டீச்சரை கணக்கு பண்ண டிரை பண்ணுவாங்க. டீச்சரும் ஒருத்தரை கணக்கு பண்ணுவாங்க.
அப்போ “கவர்ச்சி” டீச்சரா?
கவர்ச்சி டீச்சர் இல்ல. ஆனா, கவர்ச்சியும் இருக்கும். இது முழுக்க முழுக்க கமர்சியல் படம். அதனால கமர்சியல் படத்துல உள்ள எல்லாமே இதுல இருக்கும். டீச்சர்னா அவங்களும் சராசரி மனுஷங்க மாதிரி தான். என்ன வேலை செஞ்சாலும் எல்லாருக்கும் எல்லா ஆசையும் இருக்கும். சராசரியா ஒரு பொண்ணுக்கு உள்ள எல்லா ஆசைகளுமே அந்த டீச்சருக்கும் உண்டு. அது படத்திலயும் இருக்கும். ஆனா, படம் முடிஞ்சு நீங்க வெளிய வரும்போது அழகி மோனிகா உங்க மனசில பதிஞ்சிருப்பா. அந்த பாதிப்பை கவிதா டீச்சர் கண்டிப்பா ஏற்படுத்துவா!
சவாலாக இருந்த விஷயம்?
கண்டிப்பா இந்தப் படத்துல, இந்தக் கேரக்டர்ல நடிச்சதே எனக்கு சவாலான விஷயம்தான். அது தவிர எனக்கு சவாலான சில காட்சிகள் இந்தப் படத்துல இருக்கு. அதை நான் இப்பவே சொல்ல முடியாது. படத்துல பாருங்க.
வேறென்ன ஸ்பெஷல்?
இந்தப் படத்தில சம்பத் சார் இருக்கார். அவர் ரொம்ப கனமான ஒரு கதாபாத்திரத்தில நடிச்சிருக்காரு. போட்டோகிராபி “பசங்க” படம் ஒளிப்பதிவு செய்த பிரேம் பண்ணிருக்காரு. என்னை மட்டுமில்ல எல்லாரையுமே ரொம்ப அழகா காட்டிருக்காரு. படம் முழுக்கவும் அவரோட திறமை இருக்கும். படத்தோட பேருக்கு ஏத்தமாதிரி அவ்ளோ வண்ணமயமா படம் பிடிச்சிருக்கார்.
டைரக்டர் ராஜ் சாருக்கு இதுதான் பர்ஸ்ட் படம். அவர் ரொம்ப பெர்பெக்ஷனிஸ்ட். எல்லாம் சரியா வரணுங்கிறதுக்காக அவ்ளோ டைம் எடுத்துப்பார். முதல் பட டைரக்டர் மாதிரி இல்லாம ரொம்பவே சிறப்பா படத்தை எடுத்திருக்கார்.
மோனிகாவுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் எப்பவும் ஒரு ராசி உண்டு. அந்த ராசி இந்தப்படத்திலயும் கண்டிப்பா இருக்கும்!” என உற்ச்சாகத்தோடு முடித்தார் மோனிகா.
மோனிகா மேக்கப் இல்லாமல் நன்றாகவே “தோற்றம்” வல்லமையில் உள்ள புகைப்படத்தில் தெரிகிறது. கண்டிப்பாக வரவிருக்கின்ற படங்களிலும் மோனிகாவுக்கு மேக்கப் தேவையிருக்காது என்று நம்புகிறேன். வர்ணம் படம் பார்க்கவில்லை. இன்று தினத்தந்தியில் விமர்சனம் படித்தேன். விமர்சனமே படத்தை பார்க்க தூண்டுவதாக இருக்கிறது. நிச்சியமாக கணக்கு ஆசிரியையாக வரும் கவிதா பாத்திரம் படம் பார்ப்பவர்கள் மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்கி விடும் என்று எண்ணுகிறேன். “படத்தின் முடிவில் நிறைய பேருக்கு உடன்பாடு இல்லை என்ற விமர்சன வரிகள்” இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. இயக்குனரின் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். படம் பார்த்துவிட்டு கணக்கு ஆசிரியை யாரை கணக்கு பண்ணுகிறார்கள் என்பதை சொல்கிறேன்.