இயக்கு உயிர்கள்
வி.டில்லிபாபு
கடைத் தெருவில்
கை தவறும் நாணயங்களை
குனிந்தெடுக்கக் கூச்சம்
பந்தியில்
பசியிருந்தும் மறுசோறின்றி
கெளரவக் கையலம்பல்
ஆடையகத்தில்
வெட்கம் பிடுங்க
அவசரத் தெரிவு
தானியங்கி பண அறையில்
அவசரத்தில் இயங்கி
வரிசை நோக்கா வெளியேற்றம்
கணந்தோறும்
கோடிக் கண்கள் கவனிப்பதாய்…
நேரடி ஒளிபரப்பில்
உழல்வதாய்..
முடிவுகள், வினைகள், முகபாவங்கள்
அவரவருக்கு
ஆயிரம் கவலைகள்
யாரைப் பற்றியும் கவலைப்பட
யாருக்கும்
நேரமில்லை
அக்கறையில்லை
தெரிந்தும் வாழ்கிறார்கள்
முகமறியா யாருக்காகவோ
யார் யாரோ
படத்திற்கு நன்றி
Dillibabu.V
www.dillibabu.in
உண்மை. மனித மனம் தான் எவ்வளவு வினோதமானது இல்லையா விஜயகுமார்..படித்தவுடன் கண் மூடி யோசிக்க வைக்கும் நல்ல கவிதை!