-கவிஞர் ஏறன் சிவா 

நூல்பல கற்க வேண்டும்
நுண்மைகள் அறிய வேண்டும்
தோள்களில் வலிமை வேண்டும்
தொய்விலா நிலையும் வேண்டும்
சூழ்ச்சிகள் உணர வேண்டும்
சுடர்மிகு அறிவு வேண்டும்
வேல்விளை யாட்டும் வேண்டும்
வெற்றியின் நட்பு வேண்டும்!

கூரிய பார்வை வேண்டும்
கொள்கையில் தெளிவு வேண்டும்
சீரிய திறமை வேண்டும்
செந்தமிழ் துணையாய் வேண்டும்
நேரிய சிந்தை வேண்டும்
நெற்றியில் ஒளியும் வேண்டும்
பாரினை வெல்லும் பாட்டை
பராசக்தி அருள வேண்டும்!

-30/01/2019

———————————————

கவிஞரைப் பற்றி

சிவா செங்கோட்டையன்,
2/382, கொண்டக்காரனூர்,
சின்னப்பம்பட்டி(அ),
ஓமலூர்(வ),
சேலம்(மா), — 636306

தொழில் — விசைத்தறி நெசவாளர்
படிப்பு — இயந்திரவியல் பட்டதாரி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க