ஆதி ஸ்தானம்

மதியழகன்

சூறைக்காற்று

போராடும் மரங்களை

வேரோடு சாய்த்திடும்

வளைந்து கொடுக்கும்

புற்களை

வருடிச் சென்றிடும்

மண்ணிலிருந்து

ஆகாரத்தைப் பெறும்

அனைத்தையும்

மண் விழுங்கிடும்

 

மண் தின்ற மனிதனே

பூவாய்

காயாய்

கனியாய்

இன்னொரு மனிதனாய்

வாழ்க்கை வட்டம்

 

நிற்காமல் சுழன்றிடும்

உயிர்களெல்லாம்

மண் பொம்மைகளே

இறுதியில் மண்ணாவோம்

எனத் தெரிந்திருப்பது

மனிதன் மட்டுமே.

 

படத்திற்கு நன்றி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க