மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா
பழையன கழிதல் வேண்டும்
புதியன புகுதல் வேண்டும்
போகியின் அர்த்தம் என்று
போதனை இருக்கு நன்றாய்
வேண்டாத பொருளை எல்லாம்
தீயிலே போட்டு விட்டு
வெற்றியாய்ச் சிரித்து நிற்றல்
போகியின் நோக்கம் இல்லை!
வீட்டிலே உள்ள குப்பை
வெளியிலே போட்டு விட்டோம்
காட்டாத குப்பை எல்லாம்
மனக் கூட்டிலே நிறைந்திருக்கே
அகமதன் அழுக்கைப் போக்கல்
போகியின் அர்த்தம் என்று
அனைவரும் உணரும் வேளை
போகியே புகழ்ந்து நிற்கும்!


Leave a Reply