செய்திகள்

தேவகோட்டைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

லெ. சொக்கலிங்கம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா, உற்சாகமாக நடைபெற்றது. அனைத்து மக்களும் ஒற்றுமையாக, நன்மையுடன் வாழ வேண்டி நடைபெற்ற இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகம் நிறைய மகிழ்ச்சி, மனத்தில் உற்சாக வெள்ளம், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட்டம் எனக் கைகளில் கரும்புகளை ஏந்தி, சமத்துவப் பொங்கலை மாணவ, மாணவிகள் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் .

பொங்கல் பானை, இனிப்பு, கரும்பு, வண்ண வண்ணக் கோலங்கள், விளையாட்டுப் போட்டிகள் எனப் பாரம்பரியம் மாறாமல் பள்ளித் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.

சமத்துவப் பொங்கல் விழாவை ஒட்டி, கோலம், விளையாட்டு, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவிகளுடன் மாணவர்களும் இணைந்து கோலம் போட்டு அசத்தினார்கள். இதில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட.

மண்மக்க பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கருப்பையா செய்து இருந்தார். நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார். மாணவர்கள் அனைவரும் ‘பொங்கலோ பொங்கல்’ எனப் பாடி இறைவனை வழிபட்டனர். பின்னர், சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க