மீட்சி

ராதா விஸ்வநாதன்
கையில் அடங்காக் கல்லூரி பட்டங்கள்
அறிவு முதலீட்டில் பல பயணங்கள்
கால் பதியாத நாடுகளே இல்லை
வங்கியில் பொங்கி வழியும் கரன்ஸிகள்
அன்பும் நேசமும் தொலைந்த வாழ்க்கை
பெற்றோரின் முகம் மட்டும் முகநூலில்
தந்தை பிள்ளை பாசம் பேசும் கைப்பேசி
உறவுகளை உதிர்த்த பட்ட மரங்களாகி
மறைந்து போன இந்த வாழ்க்கையைத்
தட்டி. தூசு நீக்கி மீட்டித் தந்துள்ளது
காற்றில் கலந்து சுவாசத்தில் நுழைந்து
ஊனில் கலந்து உயிரைக் குடிக்கும் வைரஸ்
கற்றுத் தருகிறது தொலைத்த வாழ்வியலை
நீதி நூல் போதிக்க இயலவில்லை
இயற்கையை அழிக்காமல் இயல்பான
வாழ்க்கையை வாழக் கற்றுத் தந்துவிட்டது
மீண்டும் தொலைந்து போய்விடாதீர்கள்