யாதினும் இனிய நண்பா
தி.சுபாஷிணி
அருமை நண்பா!
அழகாய் இருக்கின்றாய் நீ.. மிக
அழகாய் இருக்கின்றாய் நீ,
அநாயாசமாய் அரசியலை அலசும் போது!
அழகாய் இருக்கின்றாய் நீ
அதிரடியாய் அப்துல்கலாமை
அழைத்த அறைகூவலால்..
அழகாய் இருக்கின்றாய் நீ,
அதை அர்த்தமாக்கி
முதலில் வடம் பிடித்திருந்த போது.
அழகாய் இருக்கின்றாய் நீ
சமூகத்தை அக்கறையாய்
சத்தியமான பார்வையில் பார்க்கும்போது,
அழகாய் இருக்கின்றாய்
என் இனிய நண்பா..
என்னிடம் நீ நட்பாய் இருக்கையிலே.