சுவாமி விவேகானந்தரின் முதிதை! (மொழி பெயர்ப்பு)
நறுக்… துணுக்.. (2)
பவள சங்கரி
’முதிதை’ , என்பது நம்முடைய ஆழ்மனப்பதிவுகளை முற்றிலும் அழிக்கக் கூடிய விஞ்ஞானப்பூர்வமான மற்றும் திட்டவட்டமான ஒழுங்குமுறை! எதிர்மறை சக்திகளுக்கு நம்மை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம் விரும்பத்தகாத எண்ணப்பதிவுகளை திரட்டுவது வெகு எளிது. ஆயினும் அதனை அழிப்பது எளிதான காரியம் அன்று. முதிதை – தியானம் என்பது தீய எண்ணப்பதிவுகளை களைந்தெடுத்து நல்ல எண்ணப்பதிவுகளை மட்டும் பதியச் செய்யும் முறைமை. அன்றாடம் முறையாக தியானப் பயிற்சி மேற்கொள்பவர்கள் அவ்வளவு எளிதாக எதிர்மறை உணர்வுகளால் ஆட்கொள்ளப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்களால் , தீமை விளைவிக்கக்கூடிய உணர்வுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும் பிரமாதமான மனோவலிமையை வளர்த்துக் கொள்ள இயலும்!
தமிழ் என்னும் அமுதத்தின் அமுதசுரபி மணிமேகலை. அந்த பேரின்பசுனையில் ‘வினாவிடை நான்குள’. அவையாவன:‘…தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல்
மைத்திரி கருணா முதிதையென் றறிந்துதிருந்துநல் லுணர்வாற் செற்றமற் றிடுகசுருதி சிந்தனா பாவனா தரிசனைகருதி யுய்த்து மயக்கங் கடிகஇந்நால் வகையான் மனத்திரு ணீங்கென்று…’ [255 269]
மைத்திரி: யாவரும் எமது நண்பர்களே. அவர்கள் வளமுடன் வாழ்க.கருணா: எவருக்கும் துன்பம் வேண்டா. களைந்திடுவோம், அதை.முதிதை: இது ஒரு செம்மை நிலை. ‘வசுதேவ குடும்பகம்’/யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உன்னதமான மனோபாவம்.
‘நறுக்‘ என்று இதழாசிரியரால் உணர்த்தப்பட்ட மிருதுபாவம், இது. ஸுபாஷிதம். மகவு வயிறார உண்டால், அன்னையின் வயிறு நிரம்பிய மாதிரி. இந்த செவ்விய உணர்வை எளிதில் அடைய இயலாது, இந்த சம்சார சாகரத்தில். இதற்கேற்ற பயிற்சி தியானம்.அதற்கான விழைவும் வேண்டும்.
முதிதை ஒரு அரிய சொல்.உயர்கொள்கை. சுருதியையும் சிந்தனையையும் பாவனையையும் தரிசனையையும் ஆராய்ந்துணர்ந்து, மயக்கத்தைப் போக்குவது, எப்போது? யாரு? இங்கு ‘நறுக்’ என்று வேறு விஷயங்களையும் பேசலாமோ?இது நான் விரும்பிப் படித்தப் பகுதி. வாழ்க.