கவிதைகள்

உயர்பொருளே!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா.

பிறப்பறுக்கும் பெரும்பொருளே
பெருவெளியில் நிறைபொருளே
செருக்கறுக்கும் செம்பொருளே
திருமுறையின் கருப்பொருளே
அருவுருவாய் அமைபொருளே
அணுவணுவாய் அமர்பொருளே
உளநினைவார் வருபொருளே!

உமைஅணைய உறைபொருளே
உலகசைய உறுபொருளே
நிலவுலகு உயிர்ப்புஎழ
நீள்சக்தி தருபொருளே
விளைபொருளாய் விரிபொருளே
விரிகதிராய்த் தெரிபொருளே
நிலவொளியில் வருபொருளே
நின்நாமம் நிறைபொருளே!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க