Tag Archives: சீமான்

“சரியான பாடம் புகட்டினர் மக்கள்; இது, விடியலுக்கான அறிகுறி” – சீமான்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் – திமுக கூட்டணியை வீழ்த்த, காங்கிரஸ் போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது. அவர்கள் எதிர்பார்த்த முடிவு கிட்டியிருக்கும் வேளையில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை இங்கே: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக – காங்கிரசுக் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. பணபலம், அதிகார பலம், இவற்றிற்குப் பணிய மாட்டோம். வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வரலாறு ...

Read More »

காங்கிரசுக்குத் தமிழர்களிடம் வாக்கு கேட்கத் தகுதியில்லை: சீமான்

ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கக் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்குத் தற்போது தமிழர்களிடம் வாக்கு கேட்டு வர என்ன தகுதி இருக்கிறது என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக பொதுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான தங்கபாலுவுக்கு எதிராக, 2011 ஏப்ரல் 3 அன்று மயிலை மாங்கொல்லையில் பொதுக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சீமான் பேசியதாவது, “63 ...

Read More »

“காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம்” – உவரி மக்களின் உறுதிமொழி

2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சத்தியமாகக் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டோம் என உவரி பகுதி மக்கள் சீமானிடம் உறுதி கூறினர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், நடைபெற இருக்கும் தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் அவர் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். 2011 மார்ச் 26 அன்று உவரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். உவரி ...

Read More »

‘இங்கே எல்லாம் இலவசம்; ஓட்டுதான் காசு!’ – சீமான்

ஜனநாயகத்தைக் காக்க நடப்பதாகக் கூறிக்கொண்டு, நாட்டையும் மக்களையும் தேர்தல் சிதைத்துவிட்டது. இங்கே எல்லாம் இப்போது இலவசம். ஓட்டுக்கு மட்டும் காசு என்றாகிவிட்டது, என்றார் இயக்குநர் சீமான். இந்தத் தேர்தலில், காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களை வீழ்த்தப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். தனது 17 நாள் சூறாவளிப் பிரச்சாரத்தை, காங்கிரசுக்கு எதிரான போராட்டமாக அறிவித்துள்ள சீமான், நெல்லையில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். திசையைன்விளை பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் 6 மணிக்குத் ...

Read More »

63 தொகுதிகளிலும் காங்கிரஸை வீழ்த்துவதே இலட்சியம்! – சீமான்

“காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, அந்தக் கட்சியை தமிழ்நாட்டில் இல்லாதொழிப்பது மட்டுமே நாம் தமிழர் கட்சியின் இப்போதைய நிலைப்பாடு” எனச் சீமான் அறிவித்துள்ளார். தமிழ் ஈழத்தின் தீவிர ஆதரவாளரான வைகோ, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டார். அப்படியெனில் அவரால் அதிமுக கூட்டணிக்கு அழைத்து வரப்பட்ட மற்றொரு ஈழ ஆதரவாளரான நாம் தமிழர் கட்சி சீமானின் நிலை என்ன? வைகோ – அதிமுக உறவு முறிவுக்குப் பிறகு பலர் மனத்திலும் எழுந்த இந்தக் கேள்விக்கு, கடந்த ஒரு வார ...

Read More »

கொழும்பு திரைப்பட விழாவில் பங்கேற்காதீர்கள்… -அனைத்து நடிகர்களுக்கும் சீமான் வேண்டுகோள்!

ரஜினி, அமிதாப், கமலுக்கு நன்றி – சீமான் சென்னை: எமது தொப்புள்கொடி உறவுகளின் ரத்தத்தால் நனைந்த இலங்கையில், தமிழர் படுகொலையைக் கொண்டாடும் வகையில் இரக்கமற்று நடத்தப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்திய நடிகர் – நடிகையர் யாரும் பங்கேற்க வேண்டாம். மீறிப் பங்கேற்போருக்கு எதிராக பெரும் போராட்டம் தொடரும்” என்று நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More »