இலக்கியம்கவிதைகள்

விலை கொடுத்து வாங்கும் கவலை !!!

 

 பி.தமிழ் முகில்

பெருமையாய் தான்
எண்ணிக் கொள்ளும் மனம்  !
கையில் புதிதாய்  பகட்டாய் – ஆறாவதாக
ஒரு விரல்  முளைத்து விட்டது
போன்றொரு பிரமை !!!
அது அழகாய் கவர்ச்சிகரமாய்
காட்சியளிப்பதாய் மனதிற்குள்
ஓர்   பேய்   எண்ணம் !!
புகையிலையை சுருட்டி
பற்ற வைத்து – புகையை உள்ளிழுத்து
நெஞ்சில்  நிறுத்தி – இருமாது
புகையை வெளியேற்றுதல்
உலக மகா  திறமையென்று
அறிவிலிகளின்  அறிவுரை வேறு !!
ஆனால் உண்மையில் ???
நெருப்பில் சூடு பட்டு
எரிந்து கருகிய நிலையில்
புற்று நோயால் – செயலிழந்த
நுரையீரல் !! – புற்றும் மெல்ல
உடலெங்கும்  பரவ –
உயிருக்கே வந்தது  உலை !!!
தேவையா ?? – விலை கொடுத்து
வாங்கும் இக்கவலை ??

 

Comments (6)

 1. புகை பிடித்தால் அவன்
  ஜெண்டில் மேன் என்று வேறு சொல்லிக்கொள்கிறார்கள்.

 2. உண்மை தான் ஐயா. இந்த எண்ணத்தினாலேயே பலர் இதற்கு அடிமையாகவும் உள்ளனர்.

 3. thanx for the good lyrics

 4. @ Mr. Annamalaiyaan
  Thank you for your appreciative comment Sir.

 5. இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான மிக நல்ல கருத்து!!!. இப்போது நிறைய இளம் பெண்களும் இக்கொடிய பழக்கத்திற்கு ஆளாகி வருவதைப் பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது. என்ன செய்ய?. பகிர்விற்கு மிக்க நன்றி.

 6. @ பார்வதி இராமச்சந்திரன்

  தங்களது ஊக்கத்திற்கும் வாழ்த்துகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் !!

Comment here