
பி.தமிழ் முகில்
பெருமையாய் தான்
எண்ணிக் கொள்ளும் மனம் !
கையில் புதிதாய் பகட்டாய் – ஆறாவதாக
ஒரு விரல் முளைத்து விட்டது
போன்றொரு பிரமை !!!
அது அழகாய் கவர்ச்சிகரமாய்
காட்சியளிப்பதாய் மனதிற்குள்
ஓர் பேய் எண்ணம் !!
புகையிலையை சுருட்டி
பற்ற வைத்து – புகையை உள்ளிழுத்து
நெஞ்சில் நிறுத்தி – இருமாது
புகையை வெளியேற்றுதல்
உலக மகா திறமையென்று
அறிவிலிகளின் அறிவுரை வேறு !!
ஆனால் உண்மையில் ???
நெருப்பில் சூடு பட்டு
எரிந்து கருகிய நிலையில்
புற்று நோயால் – செயலிழந்த
நுரையீரல் !! – புற்றும் மெல்ல
உடலெங்கும் பரவ –
உயிருக்கே வந்தது உலை !!!
தேவையா ?? – விலை கொடுத்து
வாங்கும் இக்கவலை ??

Leave a Reply