எல்லாம் புரிந்தவள்

2

ராமலக்ஷ்மி
child-kissing-her-fatherமகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.

அர்த்தங்கள் பல
முயன்று தோற்று

‘அப்பா
அம்மாவாகவே முடியாதோ..’
திகைத்து வருந்தி நிற்கையில்

புரிந்தவளைப் போல்
அருகே வந்தணைத்து
ஆறுதலாய் முத்தமிட்டு

எனக்கு
அம்மாவாகி விடுகிறாள்
அன்பு மகள்.

======================================

படத்திற்கு நன்றி: http://www.istockphoto.com

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “எல்லாம் புரிந்தவள்

  1. சில சமயம் அப்பாவும் அகராதியாய் மாறுவதுண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *