ஆங்கிலத்தில் வால்மீகி ராமாயணம்

1

rama

1974 இல் தொடங்கி 1975 இல் நான் வால்மீகி முனிவரின் ராமாயணத்தை ஆங்கிலத்தில் ஈரடிப் பாடல்களாகச் சிறுவர்க்காக எழுதி முடித்தேன். முதலில் சுமார் 1000 பாடல்களில் கதை முடிந்தது, முக்கியமான சில்வற்றை நீளம் கருதியும் அது சிறுவர்க்கானது என்பதாலும் அதில் சேர்க்க்காதிருந்தேன். ஆனால் அவற்றைச் சேர்க்க நினைத்துப் பெரியோர்க்கானதாக மாற்றி எழுதியதில் அது 1789 பாடலகளாக உருக்கொண்டது. அப்போது நான் மைய அரசுப் பணியில் இருந்ததால், Fair copy யைத் தட்டெழுத நேரம் கிடைக்கவில்லை. ராமரின் பட்டாபிஷேகம் வரையிலான கதை மட்டுமே அதில் அடக்கம். வண்ணான் ஒருவனின் பேச்சைக் கேட்டு மதி இழந்து ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பியது என் சிறு வயதிலேயே சம்மதமற்ற ஒன்றாக இருந்ததால் கதையைப் பட்டஞ்சூட்டு விழாவுடன் நிறுத்தினேன். ராஜாஜி அவர்களின் ஆங்கிலப் படைப்பின் அடிப்படையில் இது எழுதப்பட்டது. ஒரு முனிவரின் படைப்பை மாற்றுவதில் எனக்குச் சம்மதமில்லாததாலும், சீதை காட்டுக்கு அனுப்பப்பட்ட கதை பிடிக்காததால், அதைத்தான் நாம் சொல்லப்போவதில்லையே என்கிற சமாதானத்திலும், ராஜாஜியே வால்மிகியைத் தழுவி எழுதியிருக்கும் போது நான் செய்தால் என்ன என்கிற எண்ணத்தாலும் அதைத் தழுவியே படைக்க முற்பட்டேன்.

கணிப்பொறி வாங்கிய பிறகு அதனை மீண்டும் தட்டெழுதினேன். அதன் வெளியீட்டுக்கு இப்போதுதான் வேளை வந்துள்ளது. Cyberwit Net எனும் பதிப்பகம் அதை வெளியிட முன்வந்துள்ளது. விரைவில் அது வெளியாகிவிடும்.

அன்புடன்

ஜோதிர்லதா கிரிஜா

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆங்கிலத்தில் வால்மீகி ராமாயணம்

  1. அன்பு ஜ்யோதிர்லதா கிரிஜாஜி  உங்கள் லட்சியம் பூர்த்தி ஆனதற்கு என் பாராட்டுகள். நீங்கள் செய்த இந்த நல்ல காரியத்தை நினைத்தால் மிகப்பெருமையாக இருக்கிறது .அதுவும் இந்தக்கால குழந்தைகளுக்கு  இது போல் நிறைய தேவை . டி.வியில் ஒரு போட்டியில் மண்டோதரி யார் என்று மாணவர்களைக் கேட்க  அதனுடைய பதில் தெரியாமல் முழித்ததை நான் பார்த்து வருந்தினேன் .  உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *