ஐரேனிபுரம் பால்ராசய்யா

நாடக எழுத்தாளர். இதுவரை இருபத்தி இரண்டு நாடகங்கள் எழுதி மேடைகளில் அரங்கேற்றம் செய்திருக்கிறேன். நான் எழுதிய “ இடைவெளிகள்” எனும் நாடகம் 116 மேடைகளில் நடிக்கப்பட்டு அது நூலாக வெளிவந்துள்ளது. எனது கதைகள் ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், ராணி, தேவி, தினத்தந்தி குடும்பமலர், தினத்தந்தி ஞாயிறுமலர்,பாக்யா, தங்கம், வெளிச்சம் உங்கள் கையில், முதற்சங்கு, அமுதம்,சிறுமலர், தமிழ் மழை, போன்ற வார இதழ்களில் வெளிவந்திருக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றிகொண்டே நேரம் கிடைக்கும் பொழுது எழுதி வருகிறேன். சொந்த ஊர் குமரி மாவட்டத்தில் ஒரு கிராமமான ஐரேனிபுரம் எனும் ஊர். பிறந்த மண்ணை பிரிந்தாலும் மண்ணின் பெயர் பெயரில் நிலைத்திருப்பதில் பெருமை கொள்கிறேன்.