ஒரு ஆணியும் பிடுங்கவில்லை

பாஸ்கர்

நான் ஏதும் செய்யவில்லை தானாக நடந்தது அதுவே
பொழுதை நான் புடிக்கவில்லை அது பாட்டுக்குப் போகின்றது
புல்லை நான் வளர்க்கவில்லை தாலாட்டிக் குதிக்கின்றது
மூச்சை நான் விடவில்லை மூச்சும் என்னை விடவில்லை
நான் ஒன்றும் செய்யவில்லை தென்றல் மட்டும் தீண்டிச் செல்லும்
புன்னகைத்து நன்றி சொன்னால் முகத்தினிலே முத்தமிடும்
வானுயரும் வெளி அளந்தால் கண்களும் மனசு ஆகும்
விண்வெளியும் புல்வெளியும் முன்நெளியும் கோலமிகு வாழ்வு இது.
கட்டி போட மனசை இங்கே கயிறுடன் ஆளுண்டா?

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *