மறவன்புலவு சச்சிதானந்தனிடம் விசாரணை
மறவன்புலவு சச்சிதானந்தன்
சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனனைக் கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாதத் தடைப் புலனாய்வுப் பிரிவினர் (TID) வியாழன் 17 6 21 மாலை 3 மணி முதல் 5 மணி வரை இரண்டு மணி நேரம் விசாரித்தனர்
தயாரித்துக் கொண்டு வந்திருந்த வினாக்கொத்து ஒன்றினைக் கொண்டு 22க்கும் கூடுதலான வினாக்களைத் தொடுத்தனர். விடைகளைப் பதிந்து சென்றனர்.
சிவசேனை அமைப்புக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் அவர்கள் விசாரணை அமைந்தது.
இதுவரை காலம் சிவசேனை வெளியிட்ட நூல்கள் தட்டிகள் சுவரொட்டிகள் யாவற்றையும் ஒவ்வொன்றாகக் காட்டிய மறவன்புலவு க சச்சிதானந்தன்
ஒவ்வொரு படியை எடுத்துச் செல்லுமாறு அவர்களுக்குக் கொடுத்த போது அவற்றின் படங்கள் தம்மிடம் இருப்பதாக கூறி எடுத்துச்செல்ல மறுத்து விட்டனர்.
பசுவதைத் தடைச் சட்டக் கோரிக்கை தொடர்பாக இதுவரை சிவசேனை நடத்திய போராட்டங்கள் யாவற்றையும் விளக்கமாகக் கேட்டனர்.
Press release
Terrorism Investigation Department officials came on Thursday 17th June 2021 from Colombo to interrogate Siva Senai Chief Maravanpulavu K Sachithananthan.
They were at his home at Maravanpulavu for nearly two hours from 1500 hrs.
They had come with 22 or so questions on the activities of Siva Senai in Sri Lanka. Also they had a bundle of reference papers containing images and text on Siva Senai.
They focussed on two aspects.
1. Whether Siva Senai is in anyway connected to the LTTE left-overs and / or remnants in Sri Lanka or outside.
2. The chain of events following the one day long fast at Chavakachcheri up to now seeking ban on bovine slaughter, the venerated symbol among Buddhists and Hindus.
Replies of Maravanpulavu K Sachithananthan was recorded on paper.
Maravanpulavu K Sachithananthan gave one copy each of the publications, posters, banners, advertisements, and notices to them. They politely refused saying that copies were already available with them.