இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது பெற்ற அபராஜிதன் நாவல்
2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் உயரிய இலக்கிய விருதான ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ விழா 27.11.2024 அன்று கொழும்பு, அலரி மாளிகையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்களில் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ எம். ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘அபராஜிதன்’ நாவலுக்கு வழங்கப்பட்டது.
அத்தோடு திராவிடியன் ஸ்டாக் பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பான ‘அரேபியப் பெண்களின் கதைகள்’ மற்றும் எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு சுயசரிதை நூலான ‘ஊழின் அடிமையாக வேட்கை தணிக்கும் பெண்ணின் கதை’ ஆகிய எம். ரிஷான் ஷெரீப்பின் ஏனைய இரண்டு நூல்களும் வெவ்வேறு பிரிவுகளில் சாகித்திய விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.