சி. ஜெயபாரதன், B.E.(Hons), P. Eng. [Nuclear], Canada

இந்திய அணுமின் நிலையங்களின் பத்தாண்டுப் பெருக்கம்

2021 ஜூலை 31 தேதிக் கணக்குப்படி இந்தியாவில் இயங்கிவந்த அணுமின் நிலையங்களின் எண்ணிக்கை : 22 அவற்றில் தாராபூர், கொதிநீர் உலைகள் : 2, கனநீர் அணுமின் நிலையங்கள் : 18, கூடங்குளத்தில் அழுத்த நீர் ரஷ்யன் மாடல் : 2. இவை அனைத்தும் உற்பத்தி செய்யும் மின்சக்தி மொத்தம் : 6780 MW ஆற்றல். இவற்றின் உற்பத்தி அளவு 100 MW முதல், 500 MW , 700 MW 1100 MW வரை. தற்போது இந்தியத் தொழில்துறைகள் பெருகி, மின்சாரப் பற்றாக் குறைப் பிரச்சனை விளைந்து வருகிறது. ஆகவே இந்திய நடுவண் அரசு 2031 ஆண்டுக்குள் புதிய அணுமின் நிலையங்கள் நிறுவி, ஆற்றல் திறத்தை 22,480 MW உற்பத்தி செய்யப் போவதாய் அறிவித்துள்ளது. அவற்றில் சில கனநீர் மாடல். சில அழுத்த நீர் மாடல். இவற்றைக் கட்டி இயக்க நிதித்தொகை 18,000 கோடி தேவைப்படும் என்று கணிக்கப்படுகிறது.

கூடங்குளம் யூனிட் 1 & 2 இயங்கி வர, யூனிட் 3 & 4 கட்டுமானம் ஆகின்றன.

திட்டமிட்டவை

Power Plant Type Capacity
(MWe)
Jaitapur in Maharashtra EPR 9900 (6 × 1650 MW)
GHAVP-3 and 4 (Gorakhpur, Haryana) IPHWR-700 1400 (2 × 700 MW)
Mithi Virdi in Gujarat LWR 6000 (6 × 1000 MW)
Kovvada in Andhra Pradesh ESBWR 6000 (6 × 1000 MW)
Chutka in Madhya Pradesh IPHWR-700 1400 (2 × 700 MW)
BhimpurShivpuri in Madhya Pradesh 2800 (4 × 700 MW)
Total Capacity 27500·

தகவல்

1. India’s Nuclear Power Capacity To Triple In Next 10 Years; Will Touch 22,480 MW By 2031 (swarajyamag.com)
2. Home:Nuclear Power Corporation of India Limited (npcil.nic.in)
3.Nuclear Power Corporation of India – Wikipedia