அண்ணாகண்ணன்
உலகம் மாறவே இல்லை
என்பது உண்மை.
உலகம் அடியோடு மாறிவிட்டது
என்பதும் உண்மை.
இரண்டும் வெவ்வேறு உலகங்கள்.
பொழுது போகவில்லை
என்பார் ஒருவர்.
பொழுது பறக்கிறது
என்பார் அடுத்தவர்.
இரண்டும் சரி.
இருவரின் பொழுதுகளும் வெவ்வேறு.
அட,
ஒரே ஆளே
கடந்த நொடியில் ஒருவராகவும்
இந்த நொடியில் இன்னொருவராகவும்
இருக்கிறாரே!

Leave a Reply