காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெருவில் ‘டெம்பிள் கொலு டால்ஸ்’ (Temple Golu Dolls) என்ற நிறுவனம் உள்ளது. இவர்கள் பெருமாள் பொம்மைகளை முதன்மையாக உருவாக்குகிறார்கள். இதனை ராஜேஷ் என்பவர் நடத்துகிறார். விதவிதமான, அழகழகான பொம்மைகள் இங்கே அணிவகுத்துள்ளன. இவர்களின் பொம்மைக் கூடத்தில் இதோ ஓர் உலா.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.