அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்து துணை ஆவர் என்றே!
ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன்!
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்!
எய்ப்பு என்னை வந்து நலியும்போது
அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்!
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே!
என்ற பெரியாழ்வார் திருமொழியை நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவைச் சேர்ந்த நீலமேகம் பாடக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
