ஏவினார் கலியார் | பெரிய திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி’யிலிருந்து இரண்டு பாடல்களை நீலமேகம் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.
ஏவினார் கலியார் நலிக என்று என்மேல்
எங்ஙனே வாழுமாறு? ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்
குறுங்குடி நெடுங்கடல் வண்ணா!
பாவினார் இன்சொல் பன்மலர் கொண்டு
உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி அடைந்தேன்
நைமிசாரணியத்துள் எந்தாய்
ஊனிடைச் சுவர்வைத்து என்புதூண் நாட்டி
உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பைப் பிரியும்போது உன்தன்
சரணமே சரணம் என்றிருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கரசே!
திரைகொள் மாநெடுங்கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்
நைமிசாரணியத்துள் எந்தாய்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)