உ. அக்சயா கவிதைகள்
உ. அக்சயா
இளங்கலை, தமிழ்ப் படைப்பாக்கத் துறை
குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை
————————————————
தொட்டு விடத் தொலைவில் இருந்து
வருகிறாய்………….
தொட்டு விட்டுத் தொலை தூரம்
போகிறாய்………….
பிரியவும் இல்லை சேரவும் இல்லை
இனம் புரியா சந்திப்பில் நம் எல்லை.
இப்படிக்கு
அலையும் மணலும்
————————————————
நன்றி———
வெகுமதி இல்லா வேலைக்காரன்
கள்வன் வரும் நேரம் கத்துபவன்
கவளத்தைக் கண்கொட்டாமல் பார்ப்பவன்
மீந்தவை உண்டு உயிரை மீட்டெடுப்பவன்
கல் எடுத்தால் காணாமல் போனவன்
எல்லைக் கோட்டைத் தாண்டாதவன்
மனிதன் செய்யும் தவறுக்குத் தாராளமாய்த் தன் பெயர் தந்தவன்
மனிதனைத் திருத்த முடியாத வார்த்தைக்கு வாலைப் பரிசளித்தவன்.
உண்டு வீதியில் திரிந்துகொண்டிருக்கும் நன்றியுள்ளவன்
தொட்டு விடத் தொலைவில் இருந்து
வருகிறாய்………….
தொட்டு விட்டுத் தொலை தூரம்
போகிறாய்………….
பிரியவும் இல்லை சேரவும் இல்லை
இனம் புரியா சந்திப்பில் நம் எல்லை.
***************
வேலிக்குள் நீ
சி. ஜெயபாரதன், கனடா
வேலிக்குள் உள்ளாய் நீ
என்னுள் வட்டத்தில் நுழைகிறாய் நீ
பட்டாம் பூச்சி நீ
சிட்டாய் பறக்க இயலாது
என்னால்
சிறகு இருந்தும்
செவ்வானம் இருந்தும்
ஒற்றை சிறகு !
உரை யாடலாம் நாம்
ஈ மயிலில் வா !
*****************