மறவன்புலவு க.சச்சிதானந்தன்

Sachidanandan_Maravanpulavu1983 இனக் கலவரத்தைத் தொடர்ந்து கைதடி முகாமுக்கு வந்த மலையக அகதிகளுள் 101 குடும்பங்களின் மறுவாழ்வை தென்மராட்சியில் செய்ல்படும் அறவழிப் போராட்டக் குழு ஏற்றது.

கெற்பலியில் 61 குடும்பங்கள், மறவன்புலவில் 40 குடும்பங்கள் எனப் புதுக் குடியேற்றத்துக்குக் காணிகளைப் பொது மக்களிடம் திரட்டிய நிதியில் வாங்கினர். நான் வழங்கிய நிதியும் அந்த முயற்சிக்குப் பங்காயது.

கடந்த 25 ஆண்டுகளாக அந்த மக்களுக்குக் காணிக்கான ஆட்சி உறுதிகளை வழங்கவில்லை என்பதே தென்மராட்சியாரின் பெருந்தன்மை!

ஏ.கே. இராமலிங்கம், வி.எசு. துரைராசா, எம்.கே. சீவகதாசு ஆகிய மூவரின் பெயரில் அந்தக் காணி உறுதிகள் உள்ளன.

இவர்களுள் ஏ.கே. இராமலிங்கம் காலமாகிவிட்டார். கனடாவில் வாழும் திரு. வி.எசு. துரைராசாவின் தத்துவ உரிமம் நாவற்குளி திரு. நடராசாவிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டது.

இப்பொழுது, 22.10.2010இல் சட்டப்பூர்வ உரிமையாளர் திரு. எம். கே. சீவகதாசு மற்றும் தத்துவ உரிமதாரர் நாவற்குழி திரு. நடராசா.

61 குடும்பங்களும் காணி உறுதி இல்லாமல் அவலப்படுகிறார்கள். ஆனாலும் அற வழிப் போராட்டக் குழுவினர், இவர்களின் துயரத்தைப் போக்குவதாக இல்லை.

மிருசுவில், கெற்பலியில் குடியேறியவர்களுள் ஒருவரின் வாக்குமூலத்தை இணைத்துள்ள காணொலியில் காண்க.

http://www.youtube.com/watch?v=lreGUMD4Fng

பார்த்த காட்சியைப் பகிர்க.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *