பெண்களே ! உஷார் !!

நறுக்.. துணுக்… ( 9)

எஸ். நெடுஞ்செழியன்

விடுதிகளிலோ ,அதன் குளியல் அறைகளிலோ, உடைமாற்றும் இடங்களிலோ மற்றும் துணிக்கடைகளின் அளவு சரி பார்க்கும் அறைகளிலோ, ஆள் உயர நிலைக் கண்ணாடிகள் பொருத்தி இருப்பார்கள் .அவைகளில் ஒரு பக்கக் கண்ணாடி மற்றும் இருபக்கக் கண்ணாடி என இரண்டு வகைகள் உண்டு . ஒருபக்கக் கண்ணாடியில் நாம் பார்க்கும் பகுதி மட்டும் நம் உருவத்தை காட்டும். ஆனால் இருபக்கக் கண்ணாடியிலோ மறுபுறம் இருந்து நம்மை யாராவது பார்த்தால், அவர்கள் பார்ப்பது நமக்கு தெரியாது. அவர்கள் நமக்குத் தெரியாமல் நம்மைப் பார்க்கலாம் , படம் பிடிக்கலாம்.


உடை மாற்றும் போதோ, குளிக்கும் போதோ உஷாராக இருங்கள். அதற்கு ஒரு சின்ன சோதனை உள்ளது. படத்தில் காட்டியபடி உங்கள் விரலின் நகத்தால் கண்ணாடியைத் தொடுங்கள். விரலுக்கும் கண்ணாடிக்கும் இடைவெளி தெரிந்தால் அது ஒரு பக்கக் கண்ணாடி. இடைவெளி தெரியவில்லை என்றால் அது இரு பக்கக் கண்ணாடி. உடனே உஷாராகி அந்த இடத்தை விட்டு அகலுங்கள். இதை உடன்பிறப்புகளுக்கும், உறவுகளுக்கும் , உற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி உஷாராக்குங்கள்,

FB இல் இருந்து – செழியன்
மகிழ்ச்சியாய் இரு ! மற்றவர்களை மகிழ்ச்சியாக்கி !!*

 

1 thought on “பெண்களே ! உஷார் !!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க