பாகம்பிரியாள்

அழகு மகளோடு ஆடிப்பாடிய நேரம், 

நீர் விளையாட்டில் நனைந்தது அவள் உடை. 

சட்டென்று   கிடைத்த என்  சட்டையைச்

சுற்றியதோடு, என் செருப்பையும் போட்டு,

சின்ன மீசையையும் வலிக்காமல் வரைந்தேன்! 

அழகு மகள் அப்பாவாகி விட்ட பெருமையோடு,

அதிரடியாய்  வைத்தாள் ஒரு கோரிக்கையும்? 

“நா அப்பாவாக ஆயிட்டேன்ல , அப்ப

 நீ குழந்தையாயிடு ” என்றவள், 

அலுங்காமல் தந்த குழந்தை உடையை

அணிவது எப்படி என்ற கவலையில் நான்!  

 

படத்திற்கு நன்றி: http://www.shutterstock.com/pic-51562552/stock-photo-girl-playing-with-father-in-park.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அப்பாவின் கவலை!

  1. அப்பாவாக மகளும்,
    அப்பா மகளாகவும்
    அன்பு வாழ்வில் ஆவதை
    அழகாய்ச் சொன்ன
    அந்தக் கவலையில்
    நானும் உங்களுடன்…
    நன்று. 

             -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.