ஜெ.ராஜ்குமார்

பெற்றெடுத்த அன்னையும்
கற்றுத் தந்த தந்தையும்
காதல் சொல்லும் தோழியும்
ஊற்றெடுக்கும் அருவியும்
பொங்கிடும் கங்கையும்
காலைச் சூரியனும்
நிலவு வெளிச்சமும்
அந்தி மழையும்
பனித் துளியும்
பரந்திருக்கும் பூமியும்
பார்க்க முடியாமல்
செய்துவிட்டான் – என்
கண்ணின் மணியில் – கடவுள்
குற்றம் இழைத்து விட்டான்…!

மண்ணில் சிறந்த –
மாமனிதனையும் படைத்து விட்டான்
கண்ணைத் தானம் தரும் –
கலையை அவனுக்கு வித்திட்டான்!
மாமனிதன் ஒருவன் –
கண்தானம் செய்ததால்
என்வானம் திறந்திருச்சி இன்று
என் வாழ்க்கை விடிஞ்சிருச்சி இன்று!

பொன்போன்ற கண்ணைப்
படைத்த ஆண்டவனுக்கு –
நன்றி சொல்வோம்!
கண்ணைத் தானம் கொடுத்த – மாமனிதனுக்கு
சொர்க்கத்தில் இடம் கிடைக்க – இறைவனிடம்
வேண்டிச் செல்வோம் …!

 

படத்திற்கு நன்றி: http://www.birlaeye.org/site/eyedonation.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *