பாகம்பிரியாள்

பந்தாய் முடிந்த கொண்டையை,
பாங்காய்க் கட்டி வைக்க, நீ பயன்படுத்துவது 
ஒற்றைக் கற்றையான   கூந்தல் மட்டுமே !
அதிலேயே அது ஒய்யாரமாய் நிற்கிறது. 
இதைப் போன்றே நம் காதல் பந்தை ,
இலகுவாய்க் கட்டி வைக்க நீ பயன்படுத்துவது
உறுதியான ஓரிழை அன்பு மட்டுமே !
நீ தைரியமாகத்தான் இருக்கிறாய் ,
நான் தான் பயம் உந்த  அடிக்கடி  அதைத் 
தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

 

படத்திற்கு நன்றி: http://digitaljournal.com/article/271661

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.