மதிப்பெண்கள்
புமா
ஐந்துவிழுக்காடு
தவறுக்கு
அவசரநிலை பிரகடனம்
வன்கொடுமை வார்த்தைச்சூட்டில்
வாடும் குழந்தை.
பொருளாதார அழுத்தத்தில்
புதையும் வீடு.
சதமே நிதர்சனமெனக்
கருதும் கல்விமுறைப்
பிழைகள்.
மானுடத்தின் யதார்த்தங்கள்
பிள்ளைகள் அறிவதில்லை.
அறிந்திருந்தால் கேள்விவரும்
“ஏற்கும் பணிகளில்
ஐந்துசதவிகிதம் கூட
தவறிழைக்காதவர்
உங்களில் யாரென்று?”
படத்திற்கு நன்றி : http://sundaytimes.lk/070909/Plus/plus0001.html