ஜெ.ராஜ்குமார்

மனிதர்கள் யாரும் இல்லா வீட்டுக்குப் 
போடுகிறோம் பூட்டு!

கெட்ட எண்ணங்களையும் சேர்த்துப் 
போடுகிறோம் மனதில் பூட்டு!

உனது எனது என அபகரித்ததைக் 
கணக்கில் காட்டாது 
போடுகிறோம் கருப்புப் பூட்டு!

ஆணும் பெண்ணும் இணைய 
சமுதாயம் போடும் திருமணப் பூட்டு!

ஆண்டவன் பெயரில் 
சந்நியாசி போடும் காவி பூட்டு!

இன்னும் பலப்பல 
பூட்டு இருந்தும் –
இன்றோ என்றோ 
பிரிய இருக்கும் உயிர்க்கு 
இல்லையே ஒரு பூட்டு?

 

படத்திற்கு நன்றி: http://www.yenra.com/security/word-lock.html

1 thought on “பூட்டு

  1. வாழ்க்கையின் நிலையின்மையை எடுத்துக் காட்டும் நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க