சுகியன்

தண்டவாளத்தைப் போலவே,

கோடிகளில் வாழும் மிருகங்களின் உச்சகட்டக் கோடும்!

வறுமையில் வாடும் மனிதர்களின் உச்சகட்டக் கோடும்!

இணையாமல்

நீண்டு கொண்டே செல்கிறது,

நடுவே குறுக்கும் நெடுக்குமாய் இருக்கும்

நடுத்தர வர்க்கத்தின்

ஏக்கத்தை மட்டும் வைத்து என்ன செய்ய?

1 thought on “ஏக்கம்

  1. புரியவில்லை சுகியன். த்ண்டவாளத்தின், இரு பக்கங்களும், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.. இணைந்து நிற்பதின் மூலம், புகைவண்டியெனும் பொது சக்திக்கு தடம் ஏற்படுத்தி தருபவை. அவற்றை நீங்கள் ஒப்பிடும் விதம் புரியவில்லை.. குறுக்கும் நெடுக்குமாய் நடுத்தர வர்க்கத்தை சொல்லும் ஒப்பீடும் புரியவில்லை.. குறை கவிதையிலா? என்னிலா?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க