பிரபல சோதிடர் காயத்ரி பாலசுப்பிரமணியன்

மேஷம்: சுக்ரன் 11-ல் பொதுவாழ்வில் இருப்பவர்கள் நினைக்கின்ற விஷயங்களில் வெற்றி பெற உங்கள் வாக்குச் சாதுர்யம் கை கொடுக்கும். 10-ல் புதன். சூரியன், மாணவர்கள் மனதில் இருந்த சஞ்சலங்கள் நீங்கி, தெளிவான மனதுடன் திகழ்வார்கள். 2-ல் கேது. 8-ல் ராகு. பணியில் இருப்பவர்கள், மனசஞ்சலம் வளர இடம் கொடாதவாறு மனத் திடத்துடன் இருந்தால், வேலைகள் சீராக செல்லும். குரு 1-ல். சில பிரச்னைகள் தலைகாட்டினாலும், கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய அளவிற்கு வியாபாரிகளுக்கு மன வலிமையும், உடன் இருப்பவர் சகாயமும் கிட்டும். . 5-ல் செவ்வாய். சுயதொழில் புரிபவர்கள் தங்களுக்கு உதவக் காத்திருக்கும் நண்பர்களையும், வாய்ப்புகளையும் நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்ளவும் . 7-ல் சனி. கலைஞர்கள், எந்த செயலையும், ஈடுபாடோடு செய்தால்தான் அதில் வெற்றி காண முடியும். என்பதை மறக்க வேண்டாம்.

இ(ந)ல்லறம்: பெண்கள் உடன் பிறந்தோர்க்கு உதவும் சூழல் நிலவும் இருப்பதால், பொருளாதாரத்தில் வீண் செலவுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முன்பின் தெரியாத நபர்களிடம் சற்று கவனத்துடன் பழகுதல் அவசியம் . கவனக் குறைவாகச் செயல்படும் பிள்ளைகளை இதமாகக் கண்டியுங்கள்.

ரிஷபம்: 6-ல் சனி. இந்த வாரம் மாணவர்களுக்கு, கல்வித் தொகை பெறுதல் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாய் மாறும் சூழல் உருவாகும். 4-ல் செவ்வாய். வியாபாரிகள் பண விவகாரங்களில், அவசரப்படாதிருப்பது நல்லது. 1-ல் கேது. 7-ல் ராகு. பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் அமைதி, கடும் வார்த்தைகளாலும், அவசர செயல்களாலும் பாதிப்படையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். 9-ல் சூரியன், புதன். பொறுப்பான பதவியில் இருப்பவர்கள், கௌரவம் கருதி செய்யும் செயலுக்காக, அதிக பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். 10-ல் சுக்ரன். கலைஞர்கள், தொழில் ரீதியான நட்புகளை ஓர் எல்லையோடு நிறுத்திக் கொண்டால்,மன சஞ்சலம் குறைவதோடு அதிக இழப்புகளும் இராது. 12-ல் குரு. சுய தொழில் புரிபவர்கள் ஆரம்ப முயற்சிகளில் சுணக்கம் காட்டாமல் பொறுமை காப்பது அவசியம்.

இ(ந)ல்லறம்: .குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கனிந்து வரும். பிள்ளைகளின் பிடிவாதமான போக்கால், சற்று கூடுதல் செலவுப் பட்டியல் வந்து சேரும். பணியிடத்தில், தகவல் தொடர்பு சாதன பிரச்னைகளால், வேலைகளில் சுணக்கம் உண்டாகும்.

மிதுனம்: 11-ல் குரு. வியாபாரிகளின் ,புதிய முயற்சிகள் லாபகரமாய் அமைய கூட்டு முயற்சி கை கொடுக்கும்.6-ல் ராகு. எடுத்த காரியம் யாவும் நன்கு முடிவதால், வீடு, மனைகளை வாங்கி விற்பவர்கள், தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவார்கள். 3-ல் செவ்வாய். இந்த வாரம் கரைந்த சேமிப்பை ஈடுகட்ட எடுக்கும் முயற்சியில் பணியில் இருப்பவர்கள், நல்ல முன்னேற்றம் காண்பர் . 5-ல் சனி. பொது வாழ்வில் இருப்பவர் கள், செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலாக்கி வைத்துக் கொண்டால், மறதியால் வரும் சிக்கல்கள் அகலும். 8-ல் சூரியன், புதன். பொறுப்பான பதவியில் இருப்பவர்கள், தெரிந்தவர்களுக்கு மட்டும் சில சலுகைகளை அளிப்பது, போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் கௌரவம் குலையாமலிருக்கும். 9-ல் சுக்ரன். இந்த வாரம் கலைஞர்கள், போட்டிகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் ஏற்றவாறு தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும்.

இ(ந)ல்லறம் : பெண்கள் உறவுகளின் போக்கினை அறிந்து முக்கிய முடிவுகளை எடுப்பதே புத்திசாலித் தனம் . அத்துடன் பணியில் உள்ளவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளையும், கடமைகளையும் நல்லபடியாக முடித்து நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.

கடகம்: 8-ல் சுக்ரன். சிறு தொழில் புரிபவர்களுக்கு வேண்டிய சலுகை கிட்டும். 2-ல் செவ்வாய். பொது வாழ்வில் உள்ளவர்கள், தங்களின் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் ஈடேறுவதற்கு ஆரோக்கியம் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். .பிள்ளைகள் பெற்றோர்களின் மனதிற்கேற்ப நடந்து கொள்ள முன்வரு வார் கள். 4-ல் சனி. .நண்பர்கள் பிணக்கை மறந்து இணக்கமாக நடந்து கொள்ள மாணவர் கள், நிதானமான போக்கை கையாளவும். .5-ல் கேது. பணியில் உள்ள ஒரு சிலருக்கு தேவையில்லாத இடமாற்றமும் , அதனால் மன உளைச்சலும் உண்டாகும். 7-ல் சூரியன், புதன். பணியில் உள்ளவர்கள் தங்கள் புகழைக் கண்டு பொறாமைப் படுபவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள்வும். மாணவர்கள், மறைமுக எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட மனத்தை உறுதியாய் வைத்துக் கொள்வது நல்லது. 10-ல் குரு. வியா பாரிகள் சுகமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டாலும்,இந்த வாரம் அங்கும், இங்கும் சுற்றித் திரியும் நிலைதான்.

இ(ந)ல்லறம் : குடும்ப உறவுகளிடையே சில பிரச்னைகள் எழும் வாய்ப்பிருப்பதால், எதையும் நன்கு யோசித்து பேசினால், உறவுகள் உறுதியாக இருக்கும். இந்த வாரம் பெண்கள் நல்லது செய்தாலும், பிள்ளைகளிடமிருந்து பாராட்டைப் பெறுவது என்பது சற்று கடினம்தான்.

சிம்மம்: 9-ல் குரு. சுய தொழில் புரிபவர்கள், கடன் தொல்லைகளிலிருந்து பெருமளவு விடுபடுவர். 6-ல் சூரியன், புதன். வியாபாரிகள் எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி காண்பீர்கள். பணியில் உள்ளவர்களின் நிர்வாகத் திறன் பெருகுவதால் புதிய பொறுப்புகளும், அதற்கேற்ற வசதிகளும் வந்து சேரும். 3-ல் சனி. இந்த வாரம் கலைஞர்களுக்கு பிரபலங்களைச் சந்திப்பதுடன் அவர்களுடன் விருந்து, விழா என்று மகிழும் வாய்ப்பு பல உண்டு 1-ல் செவ்வாய். சுயதொழில் புரிபவர்கள் காலத்தின் மதிப்பும் அருமையும் உணர்ந்து செயல்பட்டால், எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். 4-ல் ராகு. மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற சலுகையை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், எந்த தொல்லையும் அருகில் வராது. 7-ல் சுக்ரன். சுய தொழில் புரிபவர்கள் செய்யும் வேலையில் கண்ணும் கருத்தாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும்.

இ(ந)ல்லறம் : சொந்தங்களையும், உடனிருப்பவர்களையும் அரவணைத்து நடத்திச் செல்லும் பெண்களுக்கு நல்ல ஒத்துழைப்போடு நல்ல பெயரும் வந்து சேரும். இந்த வாரம் கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்கு நீங்குவதால், மீண்டும் இல்லத்தில் மகிழ்ச்சி மலரும்.

கன்னி: 3-ல் ராகு. சுயதொழில் புரிபவர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் லாபகரமாகவும், வெற்றிகரமாகவும் அமைவதால், நம்பிக்கையோடு செயலாற்றுவார்கள் 2-ல் சனி. முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர்கள், சிந்தனையை பணியில் செலுத்தி எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரவிருக்கும் பிரச்சனைகளைத் தவிர்த்து விடலாம். 5-ல் சூரியன், புதன். புதிய இடங்களுக்குச் செல்பவர்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்தால், பயணங்கள் இனிமையாக அமையும். 6-ல் சுக்ரன். வெளியூர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும்,அதற்குரிய வரவு என்பது கலைஞர்களுக்கு குறைவாகவே இருக்கும். 8-ல் குரு. உயர்பதவி வகிப்பவர்கள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் அதனைத் தீர்க்கும் நபரிடம் பொறுப்புகளை அளிப்பது அவசியம். 9-ல் கேது. நாணயத்தின் அடிப்படையில் செயல்பட்டால் எந்த ஒப்பந்தமும் எளிதில் கலைஞர்கள் வசமாகும்.

இ(ந)ல்லறம் : எதிர்பாராத செலவுகளால் பெண்களின் திட்டங்களில் தொய்வு ஏற்படலாம். இந்த வாரம் பெற்றோர்கள் பிள்ளைகளின் மன அழுத்தம் அதிகரிக்க இடம் கொடாமல் நடந்து கொள்வது நல்லது. உங்கள் கருத்துக்கு நல்ல மதிப்பிருக்க, இனிமையாகப் பேசுங்கள்.

துலாம்: 5-ல் சுக்ரன். . பாராட்டைப் பெறக்கூடிய அளவிற்கு கலை நிகழ்ச்சிகள் கச்சிதமாய் நடந்தேறுவதால், கலைஞர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள் குரு 7-ல். இந்த வாரம் வெளிவட்டாரத் தொடர்புகள் வியாபாரிகள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இருக்கும். 11-ல் செவ்வாய். கலை நயத்துடன் செய்யும் காரியங்களால், அலுவலக விழா ஆகியவற்றில் பணியில் இருப்பவர்களுக்கு, தனி மதிப்பு இருக்கும். சனி உங்கள் ராசியில். பொது வாழ்வில் இருப்பவர்கள் அதிகமாகப் புகழ்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 4-ல் சூரியன் புதன். மாணவர்கள் சமயோசி தமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். பிறருக்கு உதவி செய்யும் முன் அவர்களின் தராதரத்தை அறிந்து கொண்டு செயல்படவும். வீடு, மனை வாங்க விரும்புபவர்கள் வில்லங்கம் இல்லாதவற்றை தேர்வு செய்வது நல்லது .

இ(ந)ல்லறம் : பெண்கள் கோபதாபங்களால் உங்களை நாடி வரும் நல்ல நட்பை புறக்கணிக்காதீர்கள் . போக்கு வரத்து, வாகனப் பராமரிப்பு ஆகியவற்றால் உங்கள் செலவினங்கள் கூடும். அத்துடன் பணி பளுவால், மன இறுக்கமும், எரிச்சலும் தோன்றி மறையும்.

விருச்சிகம் : 4-ல் சுக்ரன். வாடிக்கையாளர்களின் வரவால், வியாபாரிகள் மகிழ்வர். ராகு 1-ல். பொது வாழ்வில் இருப்பவர்கள் தேவையற்ற விமர்சனங்களைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம் .3-ல் சூரியன், புதன். இந்த வாரம் தந்தை வழி உறவுகளுடன் மோதல், அதிருப்தி என்று இருந்தாலும், தேவையான நேரத்தில், உறவுகள் ஓரளவு கை கொடுக்கும். 6-ல் குரு. பணி சுமை கூடுவதால்,பணியில் இருப்பவர்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகலாம். 7-ல் கேது. வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருப்பதால், வியாபாரிகள் கட்டட விரிவாக்கம் ஆகியவற்றை சற்று ஆறப் போடுவது நல்லது. 10-ல் செவ்வாய். வண்டி வாகனங்களை வாங்கி விற்பவர்கள் முறையான வழியைக் கடைப்பிடித்தால், எந்த சிக்கலும் தோன்றா மலிருக்கும். 12-ல் சனி. கலைஞர்கள் வந்து சேரும் பொறுப்பு களை சுமப்பதற்கு அதிக உழைப்பை போட வேண்டியிருக்கும்.

இ(ந)ல்லறம் : பெண்கள் சிறு பூசல்களை பெரிதாக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். குடும்ப அமைதிக்கு பங்கம் வராமலிருக்க, பெண்கள் முக்கிய விஷயங்களை குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையுடன் செயல் படுத் துவது அவசியம். பெண்கள் பொது இடங்களில் பிறரின் நிறை குறைகளை அலசாமல் இருப்பது நல்லது.

 

தனுசு : 3-ல் சுக்ரன். விலை உயர்ந்த ஆடைவகைகள், நவீன பொருட்கள் ஆகியவை மாணவர்கள் வசமாகும். குரு 5-ல். வீடு,மனை விஷயங்கள் உங்களுக்கு சாதகமாய் முடிவடையும். 6-ல் கேது. பணியில் உள்ளவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். 11-ல் சனி. சக கலைஞர்களின் ஆலோச னையால் கலைஞர்கள் தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். 2-ல் புதன், சூரியன். வியாபாரிகள், பங்கு தாரர்கள் மற்றும் ஒப்பந்ததா ரர் களுடன் வீண் சண்டைகளைத் தவிர்த்தால், வெற்றிக்கான வாய்ப்பு கை நழுவாமல் உங்கள் வசம் இருக்கும் . 9-ல் செவ்வாய். பொது வாழ்வில் உள்ளவர்கள் எதிரிகள் வகையில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம். சுய தொழில் புரிபவர்கள் சரக்கு பற்றாக்குறையை சமாளிக்க, கடன் வாங்கியாவது அதிக முதலீடு போடுவதோடு நீண்ட நேரமும் பாடுபட வேண்டியிருக்கும்

இ(ந)ல்லறம்: இந்த வாரம் பெண்கள் நினைத்தபடி காரியங்கள் நடக்காமல் இழுத்தடிப்பதால், நேரமும், பணமும் வீணாகலாம் . பணியிடத்தில் எழும் பிரச்னைகளைத் தீர்க்க நிதானத்தைக் கடைபிடியுங்கள். உறவுகளும் சீராக இருக்கும், வேலையும் தடையின்றி நடைபெறும்.

மகரம்: 2-ல் சுக்ரன். கலைஞர்களுக்கு தொல்லை தந்தவர்கள், தோள் கொடுக்கும் அளவிற்கு நட்பு பாராட்டி வருவார்கள். 11-ல் ராகு. அரசு பணியில் இருப்பவர்கள் சம்பள உயர்வு பற்றி நல்ல தகவல் பெறுவார்கள் 1-ல் சூரியன், புதன். உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களுடைய கொள்கைகளைக் கட்டிக்காக்க போராட வேண்டியிருக்கும். 4-ல் குரு. இந்த வாரம் வியாபாரிகள் எதிர்பார்த்த ஒப்பந்த வாய்ப்புகள் சற்றே தள்ளிப் போகக் கூடும். 5-ல் கேது. மாணவர்கள் முனைப்புடன் பாடங்களில் கவனம் செலுத்தி வந்தால், முதல் மதிப்பெண் பரிசாய் கிடைக்கும். 8-ல் செவ்வாய். சுயதொழில் புரிபவர்கள் ஏட்டிக்குப் போட்டிகளை சமாளித்து, சரக்குகளை விநியோகம் செய்ய வேண்டியிருக்கும். 10-ல் சனி. முதியவர்கள் உணவு, உறக்கம் இரண்டிலும் தேவையில்லாத மாறுதல்களைப் புகுத்த வேண்டாம். .முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தெளிவாகத் திட்டமிட்டபின் செயலில் இறங்கினால், நல்ல பெயர் நிலைக்கும்

இ(ந)ல்லறம்: இந்த வாரம் பெண்கள் கூட்டாய் செயல்படுவதில், சில விஷயங்களில் தலையாட்டி பொம்மையாய் இருக்க நேரிடும். உறவுகளின் தலையீட்டால், குடும்பத்தில், சில நேரம் தர்மசங்கடமான நிலை உருவாகலாம். . ஆயினும், எந்த சூழலிலும், சுய பச்சாதாபத்திற்கு இடமளிக்காதீர்கள்.

கும்பம்: 1-ல் சுக்ரன். . கூட்டுத் தொழிலில், புதியவர் சேர்க்கையால் தொழில் வளம் சீராக இருப்பதால், வியாபாரிகள் தெம்புடன் திகழ்வார்கள். 3-ல் குரு. பொது வாழ்வில் இருப்போர்கள் பிறருக்காக கடன் பட நேரிடும். எனவே எதிலும் அளவாக இருப்பது நல்லது. 4-ல் கேது. :மாணவர்கள் கவனம் மற்றும் கருத்துச் சிதறலின்றி பணிகளை மேற் கொள்ளுங்கள். அதிக மதிப்பெண்களை பெற்று மகிழலாம். 7-ல் செவ்வாய். இந்த வாரம் கலைஞர்கள் அநாவசிய செலவுகளுக்காக கடன்படும் நிலை வராதவாறு, விழிப்புட னிருப்பது அவசியம். 9-ல் சனி. கை வினை கலைஞர்கள் சிரமங்களுக்கு நடுவே தங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வார்கள். 10-ல் ராகு. பொது வாழ்வில் உள்ளவர்கள் சில எதிர்ப்பு களையும், எதிரிகளையும் சமாளிக்க பக்குவமாக நடந்து கொள்ளுதல் நல்லது. 12-ல் சூரியன், புதன். கணினித் துறையில் இருப்பவர்கள், அதிக நேரம் கண் விழித்து, வேலை செய்யும் சூழலிருக்கும்.

இ(ந)ல்லறம்: பெண்கள் உங்களால் நிறைவேற்றக்கூடிய காரியங்களுக்கு மட்டும் வாக்குறுதி கொடுப்பது நல்லது. அத்துடன், பெண்கள் தினசரி வேலைகளைத் தள்ளிப் போடாமல் செயல்பட்டால், பிள்ளைகளுடன் விளையாடி மகிழ, செலவிட அதிக நேரம் ஒதுக்கலாம்.

மீனம்: 2-ல் குரு. பங்குச் சந்தை மூலம் வியாபாரிகள் கணிசமான லாபம் பெறுவர்.3-ல் கேது. இந்த வாரம் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களைப் பெறவும், அதனைத் தக்கவைத்துக் கொள்ளவும், அவர்களின் திறமை கை கொடுக்கும். 6-ல் செவ்வாய். முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்பும், புகழும் தேடி வரும். 11-ல் சூரியன், புதன். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளில் தைரியத்தோடு இறங்கலாம். 12-ல் சுக்ரன். கலை பொருட்களை விற்பவர்களுக்கு நல்ல பாராட்டும், அதற்குரிய லாபமும், கையில் வந்து சேரும். 8-ல் சனி. மாணவர்கள், ஆசிரியர்களின் சினத்திற்கு ஆளாகாதவாறு பணிகளை உடனுக்குடன் முடித்து விடுங்கள். 9-ல் ராகு. . வியாபாரிகள் தோள் கொடுத்து பாடுபடும் பணியாளர்களின் தேவைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம்.. பொது வாழ்வில் உள்ளவர்கள் சர்ச்சைக்குரிய கருத்து பரிமாற்றங்களில் இருந்து ஒதுங்கி இருப்பது நலம். . பத்திரங்களின் பேரில் கடன் வாங்குவதை தள்ளிப் போடுவது புத்திசாலித்தனம்.

இ(ந)ல்லறம் : பெண்கள் வேலையாட்களை நம்பாமல், அத்தியாவசியமான வேலைகளை நீங்களே செய்து விடுவது நல்லது. பணியிடத்தில், கருத்து வேறுபாடும், தேவையற்ற மோதல்களும் தோன்றும் வாய்ப்பிருப்பதால், இயன்றவரை அமைதியாய் இருந்தால், அல்லல்கள் அருகே வராது. ,.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *