சித்தார்த்தா பள்ளியின் நாடகத் திருவிழா – 2012
காட்சி நாடகம், கேள்வி நாடகம், திரை நாடகம் என மூன்று வகைப்படும் நாடகக் கலைகள் , காட்சி அமைப்பின் மூலமாக கதை நடந்த கால கட்டத்தை நம் கண்முன்னே நிறுத்தக் கூடியதாயினும், அந்நாடகத்தின் வெற்றி என்பது அந்நாடகக் கலைஞர்கள், அக்கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து காட்டுவதில்தான் உள்ளது.
அந்த வகையில் ஈரோடு சித்தார்த்தா பள்ளி மாணவர்கள் மத நல்லிணக்கம், உழைப்பின் உன்னதம், மனித நேயம், பாரம்பரியப் பண்டிகைகள், அறிவியல் விஞ்ஞானி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரின் வரலாறு என பல் வேறு தலைப்புகளில் மிக அழகாக அக்கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து காட்டினார்கள் என்றால் அது மிகையாகாது.
முதுபெரும் நாடகக் கலைஞரும், தம்முடைய ஒரே நாடகத்திற்காக 11 விருதுகளைப் பெற்ற திரு பி. ஆசிர்வாதம் பேசும் போது நலிந்து கொண்டிருக்கும் நாடகக் கலைகள் காப்பாற்றப்பட வேண்டிய இத்தருணத்தில் சித்தார்த்தா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக தாளாளர் திருமதி பாரதி நாடகப் பயிற்சிப் பட்டறை வைத்து அதனை நாடகக் கலைஞர்கள் மூலமாக நடத்தச் செய்யும் ஏற்பாடு செய்திருப்பது பாராட்டிற்குரிய விசயம் என்றார்..
அரசாங்கம் கூட இசைப்பள்ளி மட்டுமே இதுவரை வைத்துள்ளதையும், அரசாங்கத்திற்கே நாடகப்பள்ளி வைக்க வேண்டும் என்று தோன்றாத போதும், பள்ளியில், நாடகப் பயிற்சி வகுப்பு வைத்திருப்பது வரவேற்பிற்குரிய விசயம் என்று மனதார வாழ்த்தினார்,
ஆங்கில வழிக்கல்வி பயின்றாலும் குழந்தைகளின் செந்தமிழ் உச்சரிப்பு அற்புதம்!!!!
Our sincere thanks to pavala shankari mam for publishing the matter in this site . ..Im GOKUL , a student of this school..and i participated in a play called “EDHIL MAGIZHCHI “..hope you like it and can learn some thing from that play..u had done wat u said..Finally my whole hearted thanks for u mam..
This site VALLAMAI is very nice and informative…