அதிஷ்டக் காரி அம்மா
சுகியன்
அவள் வயது முப்பது
ஒட்டிய நிறம் வெள்ளை!
ஒட்டாத நிறம் சிவப்பு!
மணமான ஐந்து வருடத்தில்
கடைசி வரைக் குடி போதையில்லாமல்
பார்த்த நாளில்லை அவள் கணவனை!
அவள் துரதிஷ்டம் குழந்தை பாக்கியம்
கடைசி வரை கிட்டவில்லை!
மஞ்சள் கழிவை அகற்றினாள்
குளிப்பாட்ட வைத்தாள்
மருந்து பரிமாறினாள்
இரு சக்கர நாற்காலியில் அமர வைத்து
வீட்டைச் சுற்றி வலம் வந்தாள்
படுக்கை அறையில் தூங்க வைத்தாள்
இன்னும் வைத்துக் கொண்டுள்ளாள்
கை கால் விளங்காத அம்மாவை!
அம்மாவிற்குத் தாயாக!
அதிஷ்டக் காரி அம்மா!