அவர் நாண நன்னயம் செய்க
மறவன்புலவு க.சச்சிதானந்தம்
விவேகானந்தரை உயிருடனே 1905இல் அனுராதபுரத்தில் புத்தராய்ச் சில புனைதுகில் அணிபவர் கொலைசெய்ய முயன்றபொழுது காப்பாற்றியவர் குமாரசாமி.
அவரை யாழ்ப்பாணம் அழைத்து வந்தார். வழு நெடுக வரவேற்றனர் தமிழர். உயர்கல்வி மாணவர் பலருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உரையாற்றினார்.
நெடுந்தீவு வழியாக இராமேச்சரம் அனுப்பி அங்கிருந்து இராமாதபுரம் சேதுபதியிடம் பாதுகாப்பாக விவேகாநந்தரைக் கையளித்தவர் ஈழத் தமிழர்.
இப்பொழுது 2012இல் தம்நெறிதெரியா இசுலாமியர் வெறிகொண்டு ஆரையம்பதி காத்தான்குடி எல்லையில் விவேகாநந்தர் சிலையை உடைத்ததாக ஊகிக்கின்றனர்.
விபுலாநந்தர் நிறுவிய கல்லடி இராமக்கிருட்டிண வித்தியாலயத்தில் பயின்று பயனடைந்த இசுலாமிய மாணவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களாகும். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நெறிநின்ற இசுலாமியர் ஒருவர் தன் கல்லடி இராமக்கிருட்டிண வித்தியாலயப் பள்ளி வாழ்க்கையை நெகிழ்வுடன் நினைபவர்.
நெறியலாதன புறங்கூறும் இசுலாமியர் எனத் தம்மை அழைத்தோரின் இச்செயலைத் தளமாகக் கொண்டு எதிர்வினையில் ஈடுபடாதிருப்பது இந்துக்களின் சமயக் கடமை. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்தலாகும்.
விவேகானந்தருக்கு புதிய ஒரு பிமாண்டமான சிலையை இந்தியாவிலிருந்து அனுப்பி, அதே இடத்தில் வைக்கவும் அதை இந்தியத் தலைவர்கள் வந்து திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்வது இந்திய மக்களின் தலையாய பணி.
படத்திற்கு நன்றி :