நாகை வை. ராமஸ்வாமி

என்றென்றும் முழுநிலவே சொன்னேன்,

என்னருகே நீயிருந்தால் நீயிருந்தால் அன்பே.

பொய்யென்று பொய்யென்று எண்ணாதே,

மெய்யேதான் மெய்யேதான் சொன்னேன்.

 

துடுப்பில்லாப் படகாவேன்

காற்றில்லா மூச்சாவேன்

ஒளியில்லாக் கண்ணாவேன்

ஒலியில்லாச் சப்தமாவேன்

ஆண்டெல்லாம் அமாவாசை தானே,

கண்ணே நீயின்றேல் நீயின்றேல். 

 

என்னருகே பிரியாதிருந்திடு என்னன்பே,

என்றென்றும் முழுநிலவாய் நினைப்போம்.

என் துணையே எழுபதிலும் இணை பிரியாதவளே,

என் தோழியே,  என்னருமை மனையாளே.

 

படத்திற்கு நன்றி: http://www.123rf.com/photo_5594030_happy-elderly-couple-in-love-in-park.html

2 thoughts on “என் துணையே

  1. இல்லாளைப் பற்றிய கவிதைக்கு இணையாக உங்களிருவரின் புகைப்படத்தையே போட்டிருக்கலாமே?
    உணர்வு பூர்வமான கவிதை.. வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க