நீ காதலை ஏற்பாயா?

1

வெ.ஜனனி
rose

காதல்
என்று ஒரு வார்த்தையில்
சொல்ல முடியாது!
ஆனால் இன்னும் நான்,
என் காதலையே சொல்லவில்லை
உன்னிடம்!

நான் பார்த்த ஆண்களின்
ஆயுள் மொத்தமே
கண்டேன் உன்னிடத்தில்!

கரையோரம் நின்று
ரசித்தேன் காதலை!
உன்னால்தான்
கடலின் நடுவே இருக்கிறேன்!

நான் மட்டுமில்லை!
என் உணர்வுகளும்
காதலால்
தினம்தினம்
காதல் சித்திரவதை
அனுபவிக்கின்றன!

நீ இல்லாத வாழ்க்கை?
நினைத்தேன்,
ஆனால் அதில் ஆயுள் இல்லை!

உன் அன்பு மொத்தம் வேண்டி
உனக்கே நோன்பு இருக்கிறேன்!

நீ காதலை ஏற்பாயா?
என் கரங்களைப் பிடிப்பாயா?

என் உயிர் உன்னோடும்..
உன் உயிர் என்னோடும்
சேர்ந்து இருப்பது போல்
கனாக் கண்டேன்!

பொய்யென ஊர் சொல்லும்
மெய்யென் காதல் சொல்லும்!

===========================================

படத்திற்கு நன்றி – http://www.intimatesedonaweddings.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நீ காதலை ஏற்பாயா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.