அக்கக்கூ……..
பவள சங்கரி
அக்கக்கூ… அக்கக்கூ….. அக்கக்கூ…..
களத்து மேட்டில் கானாங்குருவி ஒன்னு
கசிந்துருகி காதலனின் வரவிற்காய்
தவமிருக்க, திசைமாறிய புள்ளது
பேசிய மொழிகள் பலவும்
சிந்தையை நிறைத்து பேதலித்த
புத்தியும் நொந்த மனமும்
கொண்ட பேதை அவள்
நட்ட கல்லாய் நலிந்து நிற்க
ஆம்பி பூத்த வரப்பதனில்
ஆனந்தமாய் காகலூகம் ஒன்னு
கருத்தாய் கதைபாடி சேதிசொல்ல
ஆம்பரியமாய்க் கண்டதும் பற்றிக் கொள்ளும்
மானுடக் காதலது விட்டவுடன்
தொற்றிக் கொள்ளும் மற்றுமொரு துணையை!
புள்ளின் இனமோ தனிமையில் வாடினாலும்
துணைவேறு நாடாமல் கொண்டவனின்
வரவுக்காய் காலமெல்லாம் காத்துக்கிடக்கும்!
மண்ணில் உய்ர்ந்த புள்ளின் இனமது!
கண்ணில் நீராய் உள்ளம் நிறைக்குமது!
அக்கக்கூ… அக்கக்கூ… அக்கக்கூ…..
படங்களுக்கு நன்றி :
http://birding.about.com/od/birdprofiles/ig/Pictures-of-Sparrows/Golden-Crowned-Sparrow.htm
http://www.naturephoto-cz.com/snowy-owl-photo-293.html
குருவிகள் தினத்தில்
குறைவில்லாத காதல் பாடம்..
குக்கூ.. குக்கூ…!
-செண்பக ஜெகதீசன்…
கவிதையில் ஆழமான உணர்வும் நேசமும் பிழியப்படுகிறது.
ஆம்பி பூத்த வயலில்
ஆனந்தமாய் காகலுகம் ஒன்னு
ஆம்பரியமாய் கண்டதும் பற்றிக்கொள்ளும்.
கவிதை நயமிக்கது. அதனுடன் சொற்சேர்க்கை சிறப்பானது.
கண்ணீர் நீராய்
உள்ளம்நிறைக்குமது என்ற நெஞ்சை நெருடும் வரிகள்.
வாழ்த்துகள்
அன்புடன்
பிச்சினிக்காடு