அதிகாலைப்பல்லவன் – கவிதைப்புதினம் (பாகம்-2)
பிச்சினிக்காடு இளங்கோ
திருவரங்கம் நிறுத்தம்-2
உண்மையில் கவிதையை
உணர்ந்து படித்ததும்
படித்து ரசித்ததை
என்
பார்வைக்கு வைத்ததும்
நேர்மையாக இருந்தது
கவிதை மனதைக்
கண்டுகொள்ள முடிந்தது
கவிதை உள்ளம்தான்
கவிதையைக் கண்டுகொள்ளும்
கவிதை உள்ளம்தான்
கவிதையைக் கண்டுசொல்லும்
கவிதையே கவிதையைக்
கண்டது கண்டேன்
கவிதையும் கவிதையும்
கலந்தது கண்டேன்
கவிதையே கவிதையில்
கரைந்ததும் கண்டேன்
கடிதத்தின் இறுதியில்
முகவரி கண்டேன்
மடல்வேண்டும்
அது
உடனே வேண்டும்
அதுவும்
இப்படித்தான் வேண்டும்
கட்டுப்பாடு மிகுந்த
கல்லூரி விடுதி!
அதுவும்
பெண்கள் விடுதி!
சொல்லவும் வேண்டுமா!
தொல்லைகள் இல்லா
சொல்லோடுவேண்டும்
காதல் கடிதமில்லை
காட்டவும் வேண்டும்
யார் படித்தாலும்
கடிதம் கடிதம்தான்
யார் படித்தாலும்
தோழியின் கடிதமென்று
சொல்லவும் வேண்டும்
வேண்டும் வேண்டும்
கடிதம் வேண்டும்
அதுவும்
இப்படித்தான் வேண்டும்
இவ்வளவும் நிபந்தனைகள்
இனிதே கடைபிடித்து
உடனே மடல்வரைய
உத்தரவு இருந்தது
காதல் கடிதம்
எழுதிப் பழக்கமில்லை
காதல் கடிதம்
எழுதாமல் இருக்கவும்
மனமில்லை
புதுமையாய் எழுதவும்
தோழிவேடத்தில்
புகுந்து எழுதவும்
கற்பனை செய்தேன்
கவிதை நெஞ்சம்
உடைய கவிஞனுக்குக்
கற்பனைப் பஞ்சம்
வருமா என்ன?
வானில் வலம்வரத்
தெரிந்த நமக்கு
வார்த்தையில் உலாவர
வருமா தடை?
தோழி
தோழிக்குச் சொல்வதுபோல்
ஒரு கடிதம்….
(தொடரும்)
படத்திற்கு நன்றி :
http://ummuabdulazeez.wordpress.com/2011/04/17/shaking-hands/