88 வயதாகும் ஈழத்து வரலாற்று நாயகர் எசு. ஏ. தாவீது.

 

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

தளரா நெஞ்சம். மருத்துவமனை கண்டிராத உடல். செருப்பணியாத கால்கள். திருமணமாகாத வாழ்க்கை. 1970 முதலாகக் காய்கறி உணவு. முகத்தை மூடும் வெள்ளை மீசையும் தாடியும்.

88 வயதிலும் இரு மாடிகளுக்கும் படியேறி என் வீட்டுக்கு இன்று, புலர் காலை 0600 மணிக்கு வந்தவர், பெரியார் எசு. ஏ. தாவீது என நான் அழைக்க விரும்பும் எஸ். ஏ. டேவிட்.

1970களில் வவுனியாவில் காந்தீயம் அமைப்புத் தொடங்கிய காலங்கள். மலைநாட்டில் துணை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராசசுந்தரம், கொழும்பில் என்னிடம் வருவார். அவருடன் டேவிட் ஐயாவும் வருவார்.

கொழும்பு வைஎம்சீஏ விடுதியில் டேவிட் ஐயா தங்கியிருப்பார். அந்தக் கட்டட வரைபடத்தைத் தயாரித்துக் கொடுத்ததால், அதற்குக் கட்டணம் வாங்காததால், அவருக்கு எப்பொழுதும் அங்கே ஓர் அறை.

1972 இலங்கை அரசியலமைப்பு, அதைத் தொடர்ந்த தமிழர் நிலை, இவை எம்மை இணைக்கும் பாலம்.

மலைநாட்டுத் தமிழரை வன்னியில் குடியேற்றும் காந்தியத்தின் முயற்சி. இராசசுந்தரம், டேவிட் இருவரின் இடையறா ஈடுபாடு, இதில் என் சிறிய பங்களிப்பு.

1977 இனக் கலவரத்துடன் கொழும்பைவிட்டு வெளியேறினேன். யாழ்ப்பாணத்தில் 1978இல் தந்தை செல்வா நினைவுத் தூண் கட்டியெழுப்பும் குழுவின் செயலாளராக நான். திராவிடத் தூணாக 80அடி உயரத்தில் அமையும் வரைபடத்தைத் தந்தவர் வி. எஸ். துரைராசா. மொட்டையாக நிற்காமல் கூம்பாக்கிக் கலசத்தில் முடிக்குமாறு டேவிட் ஐயா கருத்துரைத்தால் 100 அடியாக அத் தூண் உயர்ந்தது. கட்டி முடிக்கும் வரை யாழ்ப்பாணத்தில் இருந்தேன்.

1979இன் பின் இலங்கையை விட்டகன்றேன்.

வன்னியில் காந்தியம் டேவிட், இராசசுந்தரம் இருவரின் இடையறா முயற்சி. வன்னி நிலத்தில் வன்முறைசார் இளைஞர்களின் பயிற்சி நிலையங்கள். வெளிநாட்டில் வாழ்ந்த இவை எனக்குச் செய்திகள்.

1983 வைகாசியில் டேவிட் கைதாகிறார். இலங்கை அரசின் பனாகொடைப் படைமுகாமில் தடுத்து வைக்கின்றனர். காந்திய வாதி, காந்தியம் இதழின் ஆசிரியர் எனினும் கொழும்பு அரசுக்கு டேவிட் வன்முறையாளர்.

இரு மாதங்கள் பனாகெடையில், பின்னர் கொழும்பு, வெலிக்கடைச் சிறைச் சாலையில்.

1983 ஆவணியில் இனக் கலவரம். வெலிக்கடைச் சிறைச் சாலையில் கொடுமைகள். யாவும் டேவிட் கண் முன்னே. மயிரிழையில் உயிர் தப்புகிறார் டேவிட்.

வெலிக்கடையிலிருந்து மட்டக்களப்புக்கு மாற்றம். அங்கு இரு மாதங்கள். மட்டக்களப்புச் சிறைச்சாலையை உடைத்துக் கைதிகளைத் தப்பவைத்தவர்களுள் உள்ளிருந்த டக்ளசு தேவானந்தாவும் ஒருவர்.

தப்பிய இளைஞர் யாவரும் விரைந்து படகில் தப்ப, வயதான இவர் மட்டும் தனித்து நின்றதால், 20 நாள்கள் தலைமறைவு வாழ்க்கை. திருகோணமலை, கேரதீவு எனக் கரந்து பயணித்துத் தலைமன்னாரில் இருந்து தனுக்கோடி வந்தடைகின்றனர் டேவிட்டும் வேறு பயணிகள் பதினொரு பேரும்.

மார்பளவு தண்ணீருக்குள் இறங்கிய டேவிட், கரையேறி நடந்து இராமேச்சரம் வருகிறார். மாலைகள் சூட்டி வரவேற்பு. சென்னை வருகிறார். 28 ஆண்டுகள் சென்னை வாழ்க்கை.

1986இல் சென்னைக்கு நான் வந்தேன். மீண்டும் டேவிட் ஐயாவுடன் என் தொடர்பு. தொடக்கத்தில் சென்னையிலும் அவர் உயிருக்கு ஆபத்து. எனவே சில நாள்கள் அவர் தலைமறைவு வாழ்க்கை.

கடந்த சில ஆண்டுகளாகச் சென்னை திருவல்லிக்கேணியில் ஆனைமுத்து ஐயாவுடன் இணைந்து பணிபுரிகிறார். Periyar Era என்ற ஆனைமுத்து ஐயாவின் ஆங்கில இதழுக்கு மாதந்தோறும் இலங்கை நிலவரத்தை எழுதி வருகிறார்.

கடந்த பல ஆண்டுகளாக அவர் மாதமிருமுறை கட்டாயமாக எனதில்லம் வருவார். காலை உணவுக்கு வருவார். ஓட்சுக் கஞ்சியை அவருக்காக வைத்திருப்பேன்.

இன்றும் காலை வந்தார். அமெரிக்கரான பேராசிரியர் போயில் ஈழத் தமிழருக்கு ஆற்றி வரும் நன்மைகளை எடுத்துரைத்தார். இரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார், உணவருந்தினார்.

என் வீட்டுக்கு எதிர்ப்புறமாக உள்ள கன்னிமாரா நூலகத்துக்குச் செல்வதாகச் சொல்லி விடைபெற்றார். வரலாற்று நாயகன் அவர். 38 ஆண்டுகாலத் தொடர்பு. ஈழத் தமிழரின் நன்மையே நம் இருவரின் அடித்தள நாதம். 2012 ஏப்பிரல் 24இல் தனது 88 ஆவது பிறந்த நாள் எனக் கூறிச் சென்றார். மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்கிறேன். அவரது சந்திப்பைப் பதிந்தேன், பார்க்க, பகிர்க.

http://www.youtube.com/watch?v=ScadBkOOqq0

 

 

பதிவாசிரியரைப் பற்றி

12 thoughts on “88 வயதாகும் ஈழத்து வரலாற்று நாயகர் எசு. ஏ. தாவீது.

 1. அன்புள்ள திரு.சச்சிதானந்தம் அவாகட்கு 
  வணக்கம். ஒரு வரலாற்று நாயகனின் பிறந்த நாளை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.
  திருக்குறள் வாழ்கையை வளப்படுத்தும்  வழிகாட்டிநூலை எல்லோரும் படிக்கவேண்டும் வள்ளுவர் நெறியைப் பின்பற்றவேண்டும என எனக்குச் சிலமாதங்களுக்கு முன்னர் கடிதம் எழுதியிருந்தார். அவர் கருத்தை இக்குள்ள திருக்குறள் அறிஞரின் கவனத்திற்குக் கொண்டுவந்தேன்
  திரு டேவிட் அவர்களை நீண்டகாலமாகத் தெரியும். காந்தியத்தில் இருக்கும்போது அடிக்கடி சந்தித்தேன். இந்தியாவிலும் சந்தித்தேன் ஆனல் இப்பொழுது நீண்ட காலமாகச் சந்திகும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
  பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி ஒன்று விரைவில் அனுப்பிவைப்பேன்
  நன்றி
  அன்புடன்
  ஐ.தி.சம்பந்தன்
  07.04.2012

 2. Thanks for bringing out the news about one of our great workers for Humanity into our minds.
  It is really refreshing to know the struggles, this man of humanity gone through and still giving
  what he has to our people.
  He is showing us by living and working with the same dream we all share all of our life, without
  confusing the Mullivaikkal as our end, but a SETBACK, that we will OVERCOME.  
  Thanks again.
  with love and care for the Man of a kind,
  Jey,
  Human Rights, 
  Canadian Union of  Postal Workers,
  Toronto, Canada.

 3. 74, 75 களில் அவருடன் இணைந்து பணிகள் ஆற்றும் வாய்ப்புப் பெற்றவன். முதன் முதலில் காலஞ்சென்ற வி.எஸ்.ரி. அவர்களது உவாட் பிளேஸ் பணிமனையில் சந்தித்தேன். அப்போது நாம் ‘இன்டிப்பென்டன்ற்’ என்ற பெயரில் தமிழர்களின் குரலை ஆங்கிலத்தில் வெளிக்கொணரவேண்டும் என்ற அவாவினால் வாராந்திர செய்தித் தாள் ஒன்றைப் பிரசுரிக்கும் பணியை முன்னெடுப்பதற்காகக் கூடியிருந்தோம்.  ஆபிரிக்க நாடொன்றில் கடமை புரிந்துவிட்டு இப்போது, ‘டொலர்’, கென்ற் பண்ணைகளை தமிழர் நல மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு நடத்தி வருகின்றார் என அறிமுகம் செய்யப்பட்டோம்.  அதன் பின்பு பல தடவைகள்ன பல களங்களில் சந்தித்துப் பணியாற்றியிருக்கின்றேன். எளிமையான சிந்தனைத் தெளிவுள்ள தமிழர் நலனில் ஈடிணையற்ற ஈடுபாடுகொண்ட பெரும் மனிதர்.  பின்பு 80ம் ஆண்டுகளில் அவருக்கு ஏற்பட்ட துன்பங்கள் கண்டு இரத்தக் கண்ணீர் வடித்திருக்கிறேன். தமது வாழ் நாளையே எம் இனத்திற்காக அர்ப்பணித்த எள்ளளவேனும் சுயநலமற்ற இத்தகைய பெருமக்களின் சகவாசம் கிடைத்தைப் பெரும் பேறாகக் கருதுகின்றேன்.  வாழ்நாளில் நோய் நொடியற்று, இனம் மீட்சிபெறுவதைத் தம் கண்ணால் பார்த்துவிட இறைவன் அருள வேண்டுகின்றேன்.  டேவிட ஐயாவிற்கு இதைவிட வாழ்வில் மகிழ்ச்சி தருவது வேறேதுமாக இருந்துவிட முடியாது.
  Ratna

 4. எஸ். ஏ. டேவிட் http://tawp.in/r/34j4
  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  எஸ். அருளானந்தம் டேவிட் (எஸ். ஏ. டேவிட்) கட்டடக் கலைஞர். இலங்கையில் மருத்துவர் இராஜசுந்தரத்துடன் இணைந்து காந்தியம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர்[1]. வவுனியாவில் 12 நவீன பண்ணைகள், நடமாடும் வைத்தியசாலைகள், பெண்களிற்கான பயிற்சி நிலையங்கள், சிறுவர்களிற்கான பால், திரிபோசா மா விநியோகம், சிறுவர்களுக்கு பாடஞ்சொல்ல ஆசிரியர்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர். மலையகத்திலிருந்த சில தொண்டர் நிறுவனங்களுடாக மலைநாட்டுத் தமிழரை வன்னியில் குடியேற்றுவதற்கு இவரது காந்தியம் அமைப்பு முன்னின்று உழைத்தது. ஏறத்தாழ 5000 மலையக மக்கள் வவுனியா, திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் இவ்வாறு குடியமர்த்தப்பட்டனர். புலம் பெயர்ந்து சென்னையில் வாழ்ந்து வருகிறார்.
  1983 ஏப்பிரல் 7ஆம் திகதி ஈழப் போராளிகளான உமாமகேஸ்வரன், சந்ததியார் ஆகியோரைச் சந்தித்ததற்காகவும், இந்தியாவிற்கு அவர்களை தப்ப வைத்ததற்காகவும் டேவிட், மற்றும் மருத்துவர் இராஜசுந்தரம் ஆகியோரை இலங்கை இரகசியப் பொலிஸ் பிரிவினர் கைது செய்து பனாகொடை தடுப்பு முகாமில் தடுத்து வைத்தனர்[2]. இரு மாதங்கள் பனாகொடையில் தங்கியிருந்த டேவிட் பின்னர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். சூலை 1983 இல் கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் போது வெலிக்கடைச் சிறையில் இடம்பெற்ற படுகொலைகளை நேரில் கண்டவர். மயிரிழையில் உயிர் தப்பினார்[1].
  மட்டக்களப்பு சிறை உடைப்பு
  வெலிக்கடையிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் டேவிட். இரு மாதங்கள் தங்கியிருந்த அவர் சிறைச்சாலை உடைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் பலர் தப்ப வைக்கப்பட்ட போது இவரும் அவர்களுடன் வெளியேறினார். இவர்களுடன் வெளியேறிய இளைஞர்கள் அனைவரும் படகில் தப்பிச் செல்ல, வயதான இவர் மட்டும் தனித்து நின்றதால், கிட்டத்தட்ட 20 நாள்கள் திருகோணமலை, கேரதீவு எனத் தலைமறைவாக திரிந்து, இறுதியில் தலைமன்னாரில் இருந்து வேறு 11 பேருடன் தனுக்கோடி வந்தடைந்தார்.
  தமிழ்நாட்டில் புகலிடம்
  1983 ஆம் ஆண்டில் இருந்து சென்னையில் வாழ்ந்து வரும் இவர் சென்னை திருவல்லிக்கேணியில் ஆனைமுத்து அவர்களின் Periyar Era என்ற ஆங்கில இதழுக்கு மாதந்தோறும் இலங்கை நிலவரத்தை எழுதி வருகிறார்[1].
  மேற்கோள்கள்
  88 வயதாகும் ஈழத்து வரலாற்று நாயகர் எசு. ஏ. தாவீது, வல்லமை இதழ், மறவன்புலவு சச்சிதானந்தன்
   www.tamilsguide.com

 5. சச்சிதானந்தம் ஐயா,

  டேவிற் ஐயா பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி. அவர் மீது ஒரு உயர்ந்த நன்மதிப்பும் கௌரவமும் வைத்திருப்பவர்களில் நானும் ஒருவன். அவரோடு காந்தியத்தில் ஒன்றாக நாம் வேலை செய்த நாட்கள் மிகப் பசுமையானவை. காந்தியம் தொடங்கப் பட்டபோது டேவிட் ஐயா தலைவராகவும் இராசசுந்தரம் அமைப்புச் செயலாளராகவும் அடியேன் நிர்வாகச் செயலாளராகவும் கடமையாற்றினேன். அவரது அர்ப்பணிப்புக்கு இணையாக நான் இன்றுவரை வேறு யாரையும் இதுவரை சந்திக்கவேயில்லை. அவரது கைதிற்குப் பின்பு நான் இது வரை அவரைச் சந்திகவேயில்லை. பல தொல்லைகளால் நானும் சாந்தி அக்காவுடன் லண்டன் சென்றிருந்த சமயம் டாக்டரின் தந்தை பிள்ளைகளுடன் நானும் இருந்தேன். அப்போதுதான் 1977 கலவரம் தொடங்கி அகதிகள் வந்திருந்தார்கள். அவர்களை டேவிட் ஐயாவின் வழிகாட்டலில் முதலில் பாலமோட்டைப் பண்ணையில் குடியேற்றினோம். ஐயாவின் தூரநோக்குச் சிந்தனை அபாரமானது. முன்பு ஒருமுறை கயவர்களால் அவர் மூர்க்கமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து கண்ணீர் விட்டேன். வேறு என்ன எம்மால் செய்ய முடியும். இன்று அவரை வீடியோவில் பார்த்ததிலும் கண்ணீர் விட்டேன். அவர் வாழுகின்றார் என்று சந்தோஷமும் அடைந்தேன். நான் இந்தியா அவரைச் சந்திக்க வேண்டும். தயவு செய்து எனது செய்தியை அவரிடம் தெரியப் படுத்தவும். அவரது விலாசமும் தொலைபேசி இலக்கமும் தந்தால் அவரோடு தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். அவர் இன்னும் நீடு வாழ்ந்து எமது இனத்திற்குச் சேவைசெய்ய இறைவனை வேண்டுகின்றேன்
  .

  மு.பாக்கியநாதன்
  கனடா – 1 416 792 9326
  packs100@hotmail.com

 6. சச்சிதானந்தம் ஐயா
  டேவிற் ஐயா பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி. அவர் மீது ஒரு உயர்ந்த நன்மதிப்பும் கௌரவமும் வைத்திருப்பவர்களில் நானும் ஒருவன். அவரோடு காந்தியத்தில் ஒன்றாக நாம் வேலை செய்த நாட்கள் மிகப் பசுமையானவை. காந்தியம் தொடங்கப் பட்டபோது டேவிட் ஐயா தலைவராகவும் இராசசுந்தரம் அமைப்புச் செயலாளராகவும் அடியேன் நிர்வாகச் செயலாளராகவும் கடமையாற்றினேன். அவரது அர்ப்பணிப்புக்கு இணையாக நான் இன்றுவரை வேறு யாரையும் இதுவரை சந்திக்கவேயில்லை. அவரது கைதிற்குப் பின்பு நான் இது வரை அவரைச் சந்திகவேயில்லை. பல தொல்லைகளால் நானும் வவுனியாவை விட்டு வெளியேறினேன் டாகடர் இராசசுந்தரம்; டாடர் சாந்தி அக்காவுடன் லண்டன் சென்றிருந்த சமயம் டாக்டரின் தந்தை பிள்ளைகளுடன் நானும் இருந்தேன். அப்போதுதான் 1977 கலவரம் தொடங்கி அகதிகள் வந்திருந்தார்கள். அவர்களை டேவிட் ஐயாவின் வழிகாட்டலில் முதலில் பாலமோட்டைப் பண்ணையில் குடியேற்றினோம். ஐயாவின் தூரநோக்குச் சிந்தனை அபாரமானது. முன்பு ஒருமுறை கயவர்களால் அவர் மூர்க்கமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து கண்ணீர் விட்டேன். வேறு என்ன எம்மால் செய்ய முடியும். இன்று அவரை வீடியோவில் பார்த்ததிலும் கண்ணீர் விட்டேன். அவர் வாழுகின்றார் என்று சந்தோஷமும் அடைந்தேன். நான் இந்தியா அவரைச் சந்திக்க வேண்டும். தயவு செய்து எனது செய்தியை அவரிடம் தெரியப் படுத்தவும். அவரது விலாசமும் தொலைபேசி இலக்கமும் தந்தால் அவரோடு தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். அவர் இன்னும் நீடு வாழ்ந்து எமது இனத்திற்குச் சேவைசெய்ய இறைவனை வேண்டுகின்றேன்.
  மு.பாக்கியநாதன்
  கனடா – 1 416 792 9326

  packs100@hotmail.com

 7. From: Ponniah Karunaharamoorthy
  Reply-To: Ponniah Karunaharamoorthy
  To: Satchidhanandan

  அன்பும் மதிப்பும் வாய்ந்த திரு. க. சச்சிதானந்தன் அய்யா அவர்களுக்கு;
  வணக்கம்.
  பெரியவர் டேவிட் அய்யா அவர்கள் தங்கள் வீட்டுக்கு வந்து விருந்தாடும் காணொளி கண்டுமகிழ்ந்தேன். நான் நேரில் சந்திக்க விரும்பியும் இன்னும் என் விருப்பு நிறைவேறாதவர்களின் நிரலில் டேவிட் அய்யா அவர்களும் இருக்கிறார்.  உங்களால் முடியக்கூடிய ஒரு சின்னக்காரியம் ஒன்று எனக்கு உங்களால் ஆகவேண்டும், அதை விண்ணப்பித்தே இம்மடல்.
  2010 ம் ஆண்டு சென்னை புத்தகக்கண்காட்சியின்போது என்னுடைய ‘பதுங்குகுழி’ என்கிற சிறுகதைத்தொகுதி ஒன்றை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. அத்தொகுப்பிலுள்ள பிரதான படைப்பாகிய ‘பதுங்குகுழி’ என்கிற கதையில் திரு. டேவிட் அய்யா அவர்களின் காந்திய இயக்கம் பற்றியும் அவரோடு சேர்ந்து இயங்கிய வன்னிப்பிரதேசத்து இளைஞர்கள் பற்றியும் கதையின் ஓட்டத்துக்கு சேதம் ஏற்படாது சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன். அதை பெரியவர் படிக்க நேர்ந்தால் நிச்சயம் மகிழ்வடைவார்.
  வருகின்ற ஏப்ரல்மாதம் அவர் பிறந்த தினத்தன்று அந்நூலின் பிரதி ஒன்றை என்சார்பில் அவருக்கு நீங்கள் பரிசளிக்கவேண்டும் என்பதே எனது விண்ணப்பம். அந்நூலின் கிரயம்: 120 ரூபாய்கள். அதற்குண்டான பொருண்மியத்தை நான் நிவர்த்திசெய்வேன்.
  இன்னும் அமரமொழித்தேரர் அவர்களைச் சந்தித்தபோது தமிழர்களின் பூர்வீக பிரதேசத்தில் எதற்காக புத்தர் சிலைகளை நிறுவித் தமிழர்களின் (புத்தரை வெறுக்காதபோதிலும்) எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்டீர்களா? நன்றி.
  தாங்கள் இறுக்கும் நல்ல பதிலை எதிர்பார்த்து
  உண்மையுள்ள தங்கள்
  பொ.கருணாகரமூர்த்தி.     08.04 2012
   
   P.Karunaharamoorthy, Berlin. Tel:            004930/54493337       

 8. From: benedict thomas
  To: Ratna vadivel  
  Sent: Sunday, April 8, 2012 6:58 PM
  Subject: RE: 88 வயதாகும் ஈழத்து வரலாற்று நாயகர்
  Anpulla Ratna,
    I knew him when he was aan Architect in the PWD where I started my career.He was a committed Tamil nationalist and remained so in spite of so many difficulties he encountered and the ailments he sufered so silently and patiently. What he dreamed will come true one day and that is my prayer.  
  Thomas Aiyah  

 9. Hello Mr Sachithananthan
  I saw your note in one of the email chains about SA David. My name is Sreetharan, and as TamilNet editor in the US, I am in
  contact with prof Boyle. I sent a translation of David’s reference  to Boyle and please see the reply.
  Best wishes to both.
  Sreetharan
  Maryland US
  301 8061866

  From: Boyle, Francis A [mailto:fboyle@illinois.edu] 
  Sent: Saturday, April 07, 2012 10:42 PM
  To: M. Sreetharan
  Subject: RE: 88-year old Sri Lankan Tamil says a few words about you in the article I saw
  That is very nice to hear. Thank you. Fab.
  Francis A. Boyle
  Law Building
  504 E. Pennsylvania Ave.
  Champaign, IL 61820 USA
  217-333-7954       (voice)
  217-244-1478 (fax)

 10. Thank you for Bringing news about “David Iya” What a wonderful news to hear about “David Iya “ . Our family used to own farm in Nedunkeri area and I happened to meet “ David Iya” at the time when I was 10 years old . This is what my father told me that time. He would have left the country like others and made lot of money for himself, what a simple man.
  Mr, Sachithananthan, Please give my regards to “David Iya”
  David Iya , wishing you Happy Birthday.

 11. satchi iya  i am  very happy to hear about David iya. please  send his  address. I  like to   wish  him and  send a card……When i was in V.R.V  i know  Dr  ,     iya  and  Kanda.  Thankyou.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *