இலக்கியம்கவிதைகள்

வித்தியாசங்களும் வேறுபாடுகளும்

 

 

வையவன்

மனித நேயத்திற்கும்
வனித நேயத்திற்கும்
என்ன வித்தியாசம்?
வயசு வித்தியாசம்.
மனித உறவுக்கும்
புனித உறவுக்கும்
என்ன வேறுபாடு?
மனசு வேறுபாடு
உலக அழகிக்கும்
உள்ளூர் அழகிக்கும்
என்ன வித்தியாசம்?
மேக்கப் வித்தியாசம்.
தலைவர் தொடர்புக்கும்
தொண்டர் தொடர்புக்கும்
என்ன மாறுபாடு?
தொகுதி மாறுபாடு.
காதல் கனவுக்கும்
கல்யாணக் கனவுக்கும்
என்ன வேறுபாடு?
கயிறு வேறுபாடு.

படத்திற்கு நன்றி :

http://www.inspirationline.com/EZINE/16JAN2006.htm

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க