.ஆறுதல் தருகிறது வானவெளி

வையவன்

அல்லாஹூவின் கஜானாவில்
எத்தனை உதயங்கள் காத்திருக்கின்றன அடுத்தடுத்து ?
எண்ண முயன்ற எத்தனை பேர் அஸ்தமித்து விட்டார்கள்?
கர்த்தரின் கருவூலத்தில்
எத்தனை காலை மாலைகள் குவிந்திருக்கின்றன?
கணக்கிட முற்பட்டவர் யாராவது மிஞ்சியது உண்டா உயிரோடு?
கண்ண பரமாத்மாவின் கண்ணின் சிறு சிமிட்டலில்
உதித்து மறைந்த யுகங்களின் கணக்குப்பிள்ளை எங்கே ?
நேற்றுப் பெய்த மழையில் பரம்பொருளின்
கருணையால் உதித்த காளான்கள் போல மனிதர்கள்
பிறக்கிறார்கள் பிடுங்கி எறியப்படுகிறார்கள் மறுநாள்
யுகக்கணக்கு போட்டுச் சேவலாகக் கொக்கரித்துக்
கோழியாகிக்  குருமாவாய் பிரியாணியாய்ப்
பொசுங்கி இரண்டு உலுக்கு பூமி உலுக்கியதுமே
அழியப் போகிறது உலகம் என்று அஞ்சிச் சாகிறார்கள்
ஐயோ பாவமென்று ஆறுதல் தருகிறது வானவெளி

 
படத்துக்கு நன்றி:http://the-strange-attraction.blogspot.in/2011_01_01_archive.html

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க