இலக்கியம்கவிதைகள்

உயிர் ஊக்கம்

சில பெண்கள் சலிப்பதே இல்லை
சீண்டு சீண்டு என்று சீண்டிக் கொண்டே இருக்கிறார்கள்
தொட்டால் இளகும் மனசுகளை.
சில கிணறுகள் மசிவதே இல்லை
தோண்டு தோண்டு என்று தூண்டிக் கொண்டே இருக்கின்றன .
சில இலக்குகள் விடுவதே இல்லை
தாண்டு தாண்டு என்று வேண்டிக்  கொண்டே இருக்கின்றன.
சில கரடிகள் சளைப்பதே இல்லை
தோண்டு தோண்டு என்று தோண்டிக் கொண்டே இருக்கின்றன
கிழங்கு புதைந்த காட்டு நிலத்தை
சில பயணங்கள் முடிவதே இல்லை
அடுத்து என்ன  அடுத்து என்னவென்று
தொட்டுவிட்ட வெற்றி தருகின்ற
மகிழ்ச்சியை உதறித் தள்ளுகின்றது ஊக்கம்
சில மனிதர்கள் சளைப்பதே இல்லை
மீண்டும் மீண்டும் சந்தித்துக்கொண்டே
வருகிறார்கள் சவால்களை
இந்த விளையாட்டு பிடிப்பதால்
சிரித்து வளர்த்துக்கொண்டே இருக்கிறது விதியும்!

படத்திற்கு நன்றி
http://www.findonvillage.com/0134_aldaniti.htm

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க