கடவுளின் பெருமிதம்

குமரி எஸ். நீலகண்டன்
Kumari_S_Neelakandan
தொடர்ச்சியான
அநியாயங்களின்
சாட்சியான அவன்,
கடவுளைத்
திட்டிக்கொண்டிருந்தான்.

உலகில்
கடவுளே இல்லை.
அப்படிக் கடவுள் இருந்தால்
அவன் திருடன்
கொள்ளைக்காரன்
அயோக்கியன்..
பித்தலாட்டக்காரன்..
ஏமாற்றுப் பேர்வழி…

நிறைய பேர்
கடவுளின் நாமம் சொல்லி
பூஜை செய்துகொண்டிருக்க

சோர்ந்திருந்த கடவுள்,
நம்பிக்கை இழந்து திட்டிய
அவனை மட்டும் பார்த்து,
நம்பிக்கையும்
பெருமிதமும் கொண்டார்.

1 thought on “கடவுளின் பெருமிதம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க