‘சிங்கையில் குருஷேத்திரம்’, 2011 மார்ச்சில் வெளியாகிறது
முழுக்க முழுக்கச் சிங்கப்பூரில் உருவான “சிங்கையில் குருஷேத்திரம்” திரைப்படம், 2011 மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிவிட்டது!
மிக அண்மையில் திரைப்படத் தணிக்கை குழுவின் U/A சான்றிதழைப் பெற்றது. தரமான படம் எனத் தணிக்கைக் குழு உறுப்பினர்களின்
பாராட்டையும் பெற்றது!
இந்தப் படத்தைப் பார்த்த கவிப்பேரசு வைரமுத்து, “என் நெஞ்சைப் பிசைந்த தரமான படம்” என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். அட்டகாசம் – அசல் இயக்குநர் சரண், “ஒரு உலக திரைப்படம்” எனப் பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில், “சிங்கையில் குருஷேத்திரம்” திரைப்படத்தை மெட்ரோ பிலிம்ஸ் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் திரையிட உள்ளது! மலேசியா, இலங்கையிலும் இத்திரைப்படம், குருஷேத்திரம் என்ற தலைப்பில் ஒரே நாளில் வெளியாகின்றது.
அழகிய சிங்கப்பூரின் இருண்ட மறு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு துணிச்சலான திரைப்படம் “சிங்கையில் குருஷேத்திரம்”.
உயிரையும் மதிக்காமல், துணிந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை இத்திரைப்படம், எதார்த்தமாகக் காட்ட முயன்றுள்ளது!
முந்தைய செய்தி – சிங்கப்பூரில் உருவான தமிழ்ப் படம்
===============================
தகவல் – மக்கள் தொடர்பாளர் செல்வரகு