பிரபல எழுத்தாளர் திரு ஏ.எஸ். இராகவன் இயற்கை எய்தினார்
//‘நீங்க அரசியல்வாதியா இல்ல பிரபலபுள்ளீயா இவ்வளோபேர் வந்து பாக்கறாங்க? “ ஆஸ்பத்திரி சிப்பந்தி கேட்டார் அப்பாவிடம்
அப்பா சொன்னார் …எல்லாருக்கும் நான் நிறைய கொடுத்திருக்கேன்ப்பா
அப்படியா அவளோபணக்காரரா நீங்க?
ஆமாம்ப்பா மனசுல பெரிய பண்க்காரந்தான் அன்பை வாரிக்கொடுத்துருக்கேன்ப்பா அதான் திருப்பிக்கொடுக்க இப்போ வந்துருக்காங்க…//
19/06/2012 அன்று திருமதி ஷைலஜா அவர்கள் தம் தந்தையாருடன் மருத்துவமனையில் இருந்தபோது நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்தார். அத்தகைய மாமனிதர், பெரும் எழுத்தாளர், நல்ல நட்புகளை பெரும் சொத்தாக நினைக்கும் மனிதம் நிறைந்தவர். இன்று நம்மிடையே இல்லையே என்று நினைக்கும் பொழுது மனதிற்கு பெரும் பாரமாகத்தான் இருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும், அவரைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினரும், அவ்ருடைய அருமை மகள், நம் வல்லமையின் தொடர் பங்களிப்பாளருமான திருமதி ஷைலஜா அவர்களின் மனம் அமைதியடையவும் எல்லாம்வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கிறோம். அவர்தம் குடும்பத்தினருக்கு வல்லமை குடும்பத்தாரின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புக்கு : ஆர்.நாராயணன் (மகன்) : 044 – 4358 6828
அன்புடன்
பவள சங்கரி
நடப்புக்கால எழுத்தாளர்களுக்கெல்லாம் ஒரு GOD FATHER ஆக இருந்து வந்த மூத்த எழுத்தாளர் திரு.ஏ.எஸ்.ராகவன் அவர்களின் மறைவுக்கு எனது இதய அஞ்சலியை தெரிவித்துக் கொள்வதோடு இனிய தோழி ஷைலஜா அவர்களுக்கு என் ஆறுதலை வார்த்தைகளால் கூறிக் கொள்கிறேன்.
God Father பொருத்தமான சொல் அல்ல, முகில். Father Figure பொருந்தும். ஷைலஜாவுடன் தொலை பேசியில் பேசி, எனக்கு ஆறுதல் தேடிக்கொண்டேன்.
மிகப் பெரிய இழப்பு. அவருடைய பல படைப்புகளை நான் ரசித்துப் படித்திருக்கிறேன்.
என்னிடம் தற்போது இருக்கும் அவருடைய ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே இட்டிருக்கிறேன்.
http://s-pasupathy.blogspot.ca/2012/07/blog-post_11.html
மதிப்பிற்குரிய திரு பசுபதி அவர்களுக்கு
வணக்கம்.
கட்டுரையை அங்கே பார்த்தேன்.அப்பா தேவன் அவர்களைப்பற்றி இப்படி எழுதியதை அப்பாவே எனக்கு சொல்லி இருக்கிறார், இங்கே மறுபடிவாசித்தபோது நிற்காத கண்ணீர் மேலும் வெள்ளமாய்ப்பெருகுகிறது.திரு சிவசூர்யநாராயணன் கவிதை வேறு நெகிழ வைக்கிறது. நினைக்கவே இல்லை காலையில் நல்ல நினைவோடு பேசிக்கொண்டிருந்த அப்பா மதியம் போய்விடுவர் என்று. ஒருவாரகாலமும் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிகிச்சைக்காக ஓய்விலிருந்தவரின் அருகில் இருந்தபோது எனக்குத்தன் விஸ்வரூபத்தைக்காட்டிவிட்டுப்போய்விட்டார். போனவர் எங்கள் நினைவில் இருக்கிறார் அவர்தம் குழந்தைகளான நாங்கள் தான் பெயருக்கு இருக்கிறோம்.
மடல்களிலும் தொலைபேசியிலும் இரங்கல் தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி.
கண்ணீருடன்
…..
ஷைலஜா
என்ன சொல்வதென்று தெரியவில்லை அக்கா. தாள இயலாத துயரத்தைத் தாங்க அரங்கன்தான் அருள வேண்டும். பிரார்த்தனைகளுடன்…
அன்புள்ள ஷைலஜா, சொற்கள் தணிக்க முடியாத துயரம் தான். என்ன செய்வது? அவருடைய எழுத்துகளில் அவர் என்றும் வாழ்வார் என்ற எண்ணமே அந்தக் கட்டுரையை நான் வெளியிடத் தூண்டியது.
ஆண்டவன் நமக்கு மனச் சாந்தியைத் தருவானாக!
அன்புள்ள ஷைலஜா,
அப்பாவின் பிரிவுதந்த துயரைத் தாங்கும் சக்தியை
அளிக்க இறைவனை வேண்டுகின்றேன்.எல்லோரின்
நினைவுகளிலும் இருப்பார்.
அன்புடன்,
தங்கமணி.
அன்புள்ள ஷைலஜா,
நான் பெங்களூரில் அவரைப் பார்த்து பேசிய விஷயங்கள் திரும்ப திரும்ப வந்துக்கொண்டே இருந்தது ,போட்டோவில் உங்களுடன் அவரைப்பார்த்த போது மரணம் வரும் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.அப்பா அம்மா ஸ்தானம் ஒரு நிரப்ப முடியாத ஒன்று. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.